ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

kapparisi-nandhi
- Advertisement -

ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரையில் விளைச்சலுக்கு புதுப்புனல் பொங்கி வரும் நீரை வரவேற்கும் விதமாக குடும்பத்துடன் நதிக்கரையில் படையலிட்டு கொண்டாடப்படும் மிக விசேஷமான விழாவாக இருந்து வருகிறது. இதில் வைக்கப்படும் நிவேதன பொருளாக காப்பரிசி உள்ளது. காப்பரிசி என்றால் என்ன? பூஜையில் காப்பரிசி படைக்கப்படுவது மிக விசேஷமாக பார்க்கப்படுவது ஏன்? அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? அதை எப்படி தயார் செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

nandhi

காப்பரிசி பூஜையில் வைக்கப்படுவதற்கு புராண காரணங்கள் உண்டு. காப்பரிசி சாப்பிடுவதால் மனத்தெளிவு உண்டாகும் என்பார்கள். இதற்கு உதாரணமாக கைலாயத்தில் ஈசனுடைய வாகனமாக இருக்கும் நந்தி தேவருக்கு ஒரு முறை பைத்தியம் பிடித்து விட்டது. அதனை சரி செய்வதற்காக சிவனின் அருளால் அன்னை பார்வதி தேவி அரிசியுடன் வெல்லம் கலந்து அதனை மருந்தாக உட்கொள்ள கொடுத்தார். இதனால் மனம் தெளிந்த நந்தி தேவர் இருவரையும் வணங்கினார். இந்த காரணத்தினால் தான் பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கு இன்றளவிலும் காப்பரிசி படைக்கப்படுகிறது.

- Advertisement -

காப்பரிசி முக்கிய பூஜைகளிலும், பிரதோஷத்தில் நந்திக்கும், பொங்கல் விழாக்களில் படையலிலும், பெண்கள் வளைக்காப்பு விழாவிலும், ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றும் மிக விசேஷமாக நிவேதனமாக வைக்கப்படுகிறது. இதை அன்றைய நாளில் சாப்பிடுபவர்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பரிசியை எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

kapparisi

காப்பரிசி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப், வெல்லம்- 1/2 கப், குட்டி குட்டியாக நறுக்கிய தேங்காய் – 1/4 கப், எள் – 1/4 டீஸ்பூன், வேர்க்கடலை – 1/4, பொட்டுக்கடலை – 1/4 கப், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

- Advertisement -

காப்பரிசி செய்முறை விளக்கம்:
பச்சரிசியை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் வடித்து வெயிலில் அல்லது ஃபேன் காற்றில் உலர்த்திக் கொள்ளுங்கள். பின்னர் கடாயில் அரிசியை போட்டு லேசாக பொறி போல் வறுக்க வேண்டும். சிறிதளவு நெய் சேர்த்து வதக்கி இறக்கி ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் தூளாக பொடித்த வெல்லம், எள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். தோலுரித்த வேர்க் கடலையையும், பொட்டுக் கடலையையும் லேசாக வாணலியில் வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்கவும். பின்னர் துண்டாக நறுக்கிய தேங்காய் பற்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

aadi-peruku1

அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமா தெய்வீக மணம் கமழும் காப்பரிசி தயாராகி விட்டது. ஆடிப்பெருக்கை கோலாகலமாக கொண்டாடி வரும் தமிழர்கள் எண்ணிக்கை இப்போது படிப்படியாக குறைந்து வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. இந்த விழாவை கொண்டாடும் கடைசி தலைமுறை இது தான் என்று இல்லாமல் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் இதனை கற்றுக் கொடுத்து பயன் பெற செய்யுங்கள். ஆடி பதினெட்டாம் நாளன்று இந்த காப்பரிசி தயார் செய்து பூஜையின் பொழுது நிவேதனமாக இலையில் வைத்து வழிபாடுகள் செய்ய வேண்டும். இதனால் வேண்டிய வரம் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் பணம் சேராமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த 6 விஷயமும் காரணமாக இருக்கலாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -