நார்ச்சத்து நிறைந்த இந்த தோசையை செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும். உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தோசையை ட்ரை பண்ணி பாருங்க.

sola-dosai
- Advertisement -

நார்ச்சத்து நிறைந்த, உடல் எடையை குறைக்கக்கூடிய சோள மாவு தோசையைத்தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இதை ஜவஹர் தோசை என்றும் சொல்லுவார்கள். ஆனால் சோள மாவு என்றதும் இதை கான்பிளவர் மாவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கான்பிளவர் மாவு என்பது வேறு. இந்த சோள மாவு என்பது வேறு. கடைகளில் சோளத்தை வாங்கி நாம் மிக்ஸி ஜாரில் போட்டு அறைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இந்த சோள மாவு ரெடிமேட் ஆகவே கடையில் இருக்கிறது. அதை வாங்கியும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அருமையான ஆரோக்கியம் தரக்கூடிய சோள மாவு தோசயை மொறு மொறுவென ஐந்து நிமிடத்தில் சுடுவது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோள மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு இந்த மாவை கரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைக்க வேண்டும். உங்கள் கையைக் கொண்டு இந்த மாவை கரையுங்கள். கட்டி படாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சோள மாவு கொஞ்சம் அதிகமாக தண்ணீர் எடுக்கும். இந்த மாவை தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ரவை தோசை போலத்தான் இந்த தோசையை, நாம் தோசை கல்லில் வார்க்க போகின்றோம். அதற்காக ரவா தோசை மாவு போல ரொம்பவும் தண்ணியாகவும் கரைத்து விடக்கூடாது. கரைத்த மாவு அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து நன்றாக சூடு பறக்க காய வைத்து விட்டு, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த தோசை மாவை ஒரு பெரிய குழி கரண்டியில் எடுத்து அப்படியே ரவா தோசை போலவே வட்டமாக தோசை கல்லில் வார்க்க வேண்டும். சிடசிடவென சத்தத்தோடு சின்ன சின்ன ஓட்டைகளோடு இந்த தோசை நமக்கு கிடைக்கும். அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விட்டு, மேலே ஒரு மூடியை போட்டு தோசையை வேக வையுங்கள்.

- Advertisement -

ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடம் தோசை ஒரு பக்கம் நன்றாக பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் மேலே நல்லெண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுத்து சுவைத்து பாருங்கள். சூப்பரான கலரில் சூப்பரான சுவையில் ஒரு தோசை தயாராகி இருக்கும். இதற்கு வழக்கம் போல சட்னி சாம்பார் தொட்டுக் கொள்ளலாம். காலை உணவாக இதை எடுத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

இந்த தோசையில் அரிசி மாவு சேர்க்கவில்லை என்றாலும் தோசை வரும். ஆனால் அரிசி மாவை சேர்க்கும்போது கொஞ்சம் மொறுமொறுப்பாக கிடைக்கும். உங்களுக்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ள விருப்பமில்லை என்றால் அதை தவிர்த்து விட்டு வெறும் சோளமாவில் கூட இந்த தோசையை சுட்டு சாப்பிடலாம். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -