காரடையான் நோன்பு(14/3/2021) அன்று படிக்க வேண்டிய ‘சத்தியவான் சாவித்திரி சரிதம்’ மற்றும் மந்திரங்கள் இதோ உங்களுக்காக!

sathyavan-savithiri-mantra
- Advertisement -

நாளை மாசி முடிந்து பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நிலைக்க செய்ய இந்த விரதத்தை பதி பக்தியுடன் மேற்கொள்வார்கள். பதிவிரதையான சாவித்திரி, தன் கணவன் சத்தியவான் அல்ப ஆயுளில் உயிர் பிரிந்த பொழுது, எமனிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்து இந்த நோன்பை கடைபிடித்தார். இவ்விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கணவனுடைய ஆயுளும், ஆரோக்கியமும் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சத்தியவான் சாவித்திரி சரிதம் மற்றும் மந்திரங்களை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

munivar

சத்தியவான் சாவித்திரி சரிதம்:
பத்ர தேசத்தை ஆண்டு வந்த அஸ்வபதி என்கிற மன்னனுக்கு மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. அஸ்வபதி மன்னன் மிகுந்த தயாள குணம் உள்ளவன். அஸ்வபதி மன்னனுக்கும், மகாராணி மாலதி தேவிக்கும் வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் மகாராணி விரதமிருந்து வஷிஸ்ட மகரிஷியிடம் வேண்டி வணங்கிய பொழுது அவர் வேத மாதாவாக விளங்கும் சாவித்திரி தேவியின் ‘ஆராதனா மந்திரத்தை’ உபதேசித்தார்.

- Advertisement -

அந்த மந்திரத்தின் வலிமையால் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதனால் அவளுக்கு சாவித்திரி என்ற பெயர் வைத்தனர். திருமண வயதை அடைந்த சாவித்திரி, ஒரு முறை விதி வசத்தால் கண் பார்வை இல்லாத பெற்றோர்களை அன்போடு பராமரித்து வந்த சத்தியவானை சந்திக்க நேர்ந்தது. பெற்றோர்களை இவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்ளும் நல்ல குணத்தை கண்டு அவனையே தன் கணவனாகவும் மனதில் நினைத்து கொண்டாள்.

karadaiyan

சாவித்திரியின் ஆசைப்படி அவளது தந்தையும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் நாரதர் அங்கு வந்து, சத்தியவான் அற்ப ஆயுள் உடையவன் என்கிற உண்மையை கூறுகிறார். நீ வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பது தான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்துகிறார். ஆனால் அதை பெரிதும் பொருட்படுத்தாத சாவித்திரி தன் தந்தையிடம் மன்றாடி சம்மதத்தை பெற்றுக் கொண்டு திருமணமும் முடிகிறது.

- Advertisement -

மாசி மாதத்தின் கடைசி கடைசி நாளான அன்று விறகு வெட்ட சென்ற சத்தியவானின் உயிரை பறித்தார் எமதர்மராஜன். பங்குனி மாதம் துவங்கிய நேரத்தில் பாசக்கயிற்றை வீசி எமன் சத்தியவான் உயிரை எடுக்கிறார். பத்தினியான சாவித்திரிக்கு எமதர்மன் கண்களுக்கு தெரிந்ததால், எமதர்மராஜனை பின் தொடர்ந்து சென்று, தன் கணவனின் உயிரை மீட்க போராடுகிறாள். அவளுடைய நீண்ட நெடிய இந்த போராட்டத்தை கண்ட யமராஜன் என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்கிறார்.

karadaiyan1

சாவித்ரி சாதுர்யமாக, என் கற்பிற்கு பங்கம் வராமல் 100 குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். அந்த நூறு குழந்தையையும் தன் மாமனார், மாமியார் கண் குளிர பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் கேட்கிறாள். அப்படியே ஆகட்டும் என்று சற்றும் யோசிக்காமல் எமதர்மராஜனும் வரம் அளித்து விடுகிறார் ஆனால் இந்த ஒரே வரத்தில், சத்தியவான் உடைய உயிரும், அவனின் பெற்றோர்களுடைய பார்வையும் கிடைத்து விடுகிறது. கற்பிற்கு பங்கம் வராமல் 100 குழந்தை, சத்தியவான் இல்லாமல் எப்படி பிறக்கும்?

- Advertisement -

விரதத்தின் போது பொழுது பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்:
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

thiyanam-mantra

தியானத்தின் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்
புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.

நோன்பு சரடு மாற்றிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ ஸர்வதா

sathyavan-savithiri

எதற்கும் அஞ்சாத எமனையே கலங்க வைத்த சாவித்திரியின் புகழ் உலகமெங்கும் பரவியது. இத்தனை போராட்டத்தையும் எதிர்கொள்ள சாவித்திரிக்கு மூன்றே முக்கால் நாழிகை ஆனது. அதாவது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதனால் தான் ஒரு மனிதன் இறந்த பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து காரியங்களை துவங்குகிறார்கள். ஒன்றரை மணி நேரம் இறந்த மனித உடலில் சூடு அப்படியே இருக்கும் என்கிறது அறிவியல்.

- Advertisement -