- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரியத் தடைகளை தகர்க்கும் விநாயகர் மந்திரம்

காரியத் தடைகளை தகர்க்கும் விநாயகர் மந்திரம்

- Advertisement -

இன்று தை மாதம் வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி. அதுவும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறது. இதுபோல அற்புதம் நிறைந்த ஒரு நாள் மீண்டும் நமக்கு எப்போது அமையும் என்று சொல்ல முடியாது. இந்த நாளில் விநாயகர் வழிபாட்டை தவறாமல் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை, வீட்டில் விளக்கு ஏற்ற முடியவில்லை, விநாயகருக்கு அருகம்புல் கூட சாற்ற முடியவில்லை, இப்படி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்து ஐந்து நிமிடம் கண்களை மூடி, வினைகளை தீர்க்கும் விநாயகரே, என்னுடைய கஷ்டங்களையும் தீர்த்து வையப்பா, என்று வேண்டிக் கொண்டாலே போதும். அந்த ஆணை முகத்தான், தும்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கை நாயகன், உங்களுடைய கஷ்டங்களை நிச்சயம் தீர்த்து வைப்பான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதேபோல இன்று நீங்கள், பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தையும் உச்சரித்தால், ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய காரியத்தடை ஆனது உடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, இன்று மாலை நேரம் கிடைத்தது, பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லலாம் என்றால், அந்த விநாயகர் கோவிலுக்கு மாலை 6:30 மணிக்கு மேல் செல்ல வேண்டும். சந்திரன் உதயமான பிறகுதான் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டிற்கு உரிய நேரம் என்று சொல்லுவார்கள். எல்லா விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் விநாயகருக்கு அலங்காரம் நடக்கும். அந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

விநாயகர் மந்திரம்

விநாயகர் சன்னிதானத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக தடையாக இருக்கும் ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க, கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வர, குழந்தைகளுக்கு திருமணம் நடக்க, இப்படி ஏதோ ஒரு தடை என் வாழ்க்கையில், என்னை முன்னேற விடாமல் தடுக்கிறது என்று நிச்சயம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். சில பேருக்கு வேலை கிடைக்காது. சில பேருக்கு கொடுத்த பணம் திரும்பவும் வராது.

எதுவாக இருந்தாலும் சரி, அந்த ஒரு தடையை, அந்த ஒரு தடங்கலை, எனக்கு சரி செய்ய வேண்டும், அதற்கு நீ தான் துணை புரிய வேண்டும் என்று சொல்லி, “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். எண்ணிக்கையே வைக்க வேண்டாம். 5 நிமிடம், 10 நிமிடம் அந்த கோவிலிலேயே அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை சொல்லுங்கள். குறிப்பிட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை சரியாக வேண்டும் என்பதை பிள்ளையாரிடம் நீங்கள் சொல்லி விடுங்கள்.

- Advertisement -

பிரச்சனை ரொம்ப பெருசு, உயிர் போகும் சூழ்நிலை என்றால், 1 மணி நேரம் அந்த விநாயகர் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் உங்களுடைய அந்த பிரச்சனை தீர உண்டான வழியை அந்த விநாயகர் செய்ய தொடங்கி விடுவார். பிறகு அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் நீங்கள் நினைத்த வேண்டுதல் நிச்சயம் பலித்திருக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: இன்று மாலை விநாயகர் கோவிலில் அமர்ந்து இந்த 1 வார்த்தையை சொன்னால், அடுத்த 1 மணி நேரத்தில், நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும்.

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு. இந்த சங்கடஹர சதுர்த்திக்கு, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால், அடுத்த சங்கடஹர சதுர்த்திக்கு கட்டாயம் கோவிலுக்கு போவீங்க. கோவிலுக்கு வரும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பரிகாரத்தை சொல்லிக் கொடுப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரமும் கூட இது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும், விநாயகரை வழிபாடு செய்தவர்கள் என்றுமே ஏமாற்றப்பட்டது இல்லை என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்