- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்சமையல் அறையில் குட்டி குட்டி கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட.

சமையல் அறையில் குட்டி குட்டி கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் இந்த குட்டி குட்டி கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இந்த குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் பெருசாக வளராது. குட்டி குட்டியாகவே அழிந்து போய்விடும். இந்த ரக கரப்பான் பூச்சிகளை நம் கிச்சனில் குறைக்க என்ன செய்யலாம்.

செயற்கை முறையில் ஹிட் ஜெல் எல்லாம் கிடைக்கிறது அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் சில பேருக்கு அதையெல்லாம் சமையலறையில் பயன்படுத்த விருப்பம் இருக்காது. இயற்கையான முறையில் குட்டி குட்டி கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சூப்பர் ஐடியா இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

முதல் ஐடியாவாக ஒரு சூப்பர் டிப்ஸ். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கோங்க. அதில் சர்க்கரை 1 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விட் 1/2 ஸ்பூன் போட்டு கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த இரண்டு பொருட்களையும் கரைத்து, அப்படியே ஸ்டவ்வுக்கு அடியில் வைக்கவும்.

இந்த சர்க்கரை வாசத்திற்கு குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, அந்த டப்பாவுக்குள் தண்ணீரில் விழுந்து செத்துக் கிடக்கும். சின்ன சின்ன பிளாஸ்டிக் ஸ்வீட் பாக்ஸ் டப்பா வருது இல்லையா. அந்த டப்பாக்களை இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

இரண்டாவதாக ஒரு சூப்பர் டிப்ஸ். இதே போல ஒரு சின்ன பிளாஸ்டிக் பாக்ஸ் எடுத்துக்கோங்க. அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றுங்கள். நன்றாக புளித்த வாசம் வீசக்கூடிய தயிர் இரண்டு ஸ்பூன் ஊற்றி அந்த தண்ணீரில் நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் வையுங்கள். மறுநாள் காலை எழுந்து பாருங்கள். உங்களுக்கே அதில் எத்தனை கரப்பான் பூச்சி விழுந்து செத்து இருக்கிறது என்று தெரியும். குட்டி குட்டி கரப்பான் பூச்சிகளுக்கு தான் இந்த டிப்ஸ் வொர்க் அவுட் ஆகும்.

- Advertisement -

அதே போல நீங்கள் சமையலறையை இரவு நேரத்தில் சுத்தம் செய்துவிட்டு இந்த குறிப்பை பின்பற்ற வேண்டும். சிங்கிள் பாத்திரங்கள் இருக்கக் கூடாது. சமையல் குப்பையை சமையலறையை விட்டு இரவே எடுத்து வெளியில் வைக்க வேண்டும். சிங்குக்கு அடியில் குப்பை கூடையை வைக்கக் கூடாது.

சமையலறை மேடை திண்ணை ஸ்டவ் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு மேல் சொன்ன குறிப்பை பின்பற்றவும். தினம் தினம் சமையலறையை இரவு நேரத்தில் சுத்தம் செய்து வைக்கும் போது தான் நமக்கு கரப்பான் பூச்சி தொல்லை குறையும். இப்படி தினமும் சமையலறையை சுத்தம் செய்து விட்டு ஒரு ஸ்ப்ரே தயார் செய்து எல்லா இடத்திலும் தெளித்து விட வேண்டும்.

ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 4 கிராம்பை நன்றாக இடித்து பொடி செய்த தூளாக போடவும், இதோடு 1 ஸ்பூன் தூள் உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும் இந்த ஸ்ப்ரேவை சமையலறை மேடை, ஸ்டவ், சமையலறைக்கு கீழ்ப்பக்கம், சிங்குக்கு கீழ்ப்பக்கம், இப்படி சமையல் அறையில் எல்லா இடங்களிலும் இரவு நேரத்தில் ஸ்பிரே செய்துவிட்டால், இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி வரவே வராது.

இதையும் படிக்கலாமே: இயற்கையான முறையில் வீட்டிலேயே பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயாரித்தல்.

லவங்கம் தூள் கிடைத்தால் கூட இந்த குறிப்புக்கு நீங்கள் பயன்படுத்தலாம். லவங்கம் வாசம் கரப்பான் பூச்சிக்கு பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்