- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய வெற்றிக்கு, வெற்றிலை பரிகாரம்

காரிய வெற்றிக்கு, வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் சீக்கிரம் வெற்றியடைய வேண்டும், வெற்றிக்கு மேல் வெற்றி சேரும்போது தான் வாழ்க்கையில் சீக்கிரம் ஜெயிக்க முடியும். உதாரணத்திற்கு சொந்த தொழில் தொடங்குவதற்காக ஏதோ ஒரு புது முயற்சி எடுக்கிறீர்கள்.

வங்கியில் முதலீட்டிற்காக கடன் கேட்பதற்காக போறீங்க, அந்த காரியம் தடைபடாமல் நடக்குமா, நாம் கேட்ட பணம் கடனாக நமக்கு சீக்கிரம் கிடைக்குமா. இதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி. ஆன்மீகத்தில் இதற்கு ஒரு வழி இருக்குது. அதைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பத்து ரூபாய்க்கு கடையிலிருந்து வெற்றிலை வாங்குங்கள். நீங்கள் வாங்கும் வெற்றிலை, இரட்டைப்படையாக வருதா, ஒற்றை படையாக வருகிறதா என்று பாருங்கள். வாங்கிய வெற்றிலையின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருந்தால், நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி அடையும். உங்களுடைய முயற்சியில் தோல்வி ஏற்படாது. 10 ரூபாய்க்கு வெற்றிலை வேண்டும் என்று தான் கேட்க வேண்டும். வெற்றிலையின் கணக்கை நீங்கள் அவர்களிடம் சொல்ல கூடாது.

அவர்களே குத்துமதிப்பாக ஒரு வெற்றிலை கட்டை உங்களிடம் கொடுப்பார்கள். அதை எடுத்து எண்ணிப் பாருங்கள். ஒற்றைப்படையில் வந்தால் நிச்சயம் நீங்கள் அடுத்த நாள் மேற்கொள்ளும் முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும். இரட்டைப்படையில் வந்து விட்டால் என்ன செய்வது. உங்களுடைய முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் வரும் என்பது அர்த்தம். அதற்காக துவண்டு போகக்கூடாது. உங்களுடைய முயற்சிகளை செய்து கொண்டே இருங்கள்.

- Advertisement -

மீண்டும் 3 நாள் கழித்தோ, 5 நாள் கழித்தோ, இப்படி பணம் கொடுத்து வெற்றிலையை வாங்குங்கள். ஒற்றைப்படையில் வந்துவிட்டது. அந்த வெற்றிலை கட்டில் இருந்து ஒரே ஒரு வெற்றிலையை மட்டும் எடுத்து அதில் ‘3 மிளகு’ வைத்து மடித்து ஒரு நூல் போட்டு கட்டி பூஜை அறையில் வைத்து விட்டு, நான் முயற்சி செய்யும் காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து, குலதெய்வத்தை நினைத்து இந்த வெற்றிலையை எடுத்து உங்கள் பாக்கெட்டிலும், மணி பர்ஸிலோ வைத்து வங்கிக்கு செல்லுங்கள்.

நீண்ட நாட்களாக அலைந்து திரிந்து லோன் கிடைக்காத சூழ்நிலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால், இந்த பரிகாரத்தை செய்து இந்த வெற்றிலையை உங்கள் கையோடு எடுத்து செல்லும்போது, நிச்சயம் அந்த லோன் சேங்ஷன் ஆகும். ஒவ்வொரு முறை 10 ரூபாய்க்கு வெற்றிலை வாங்கி அதை என்ன செய்வது. வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு தானமாக கொடுத்து விடலாம், அல்லது கோவிலுக்கு சென்று அர்ச்சகருக்கு அந்த வெற்றிலையை கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: 17-09-2024 பௌர்ணமி வழிபாடு

வெற்றிலையை தனியாக கொடுக்கக் கூடாது. பாகோடு சேர்த்து கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய முயற்சிகளில் நிறைய முறை நீங்கள் தோல்வி அடைந்திருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நீண்ட நாள் முயற்சி செய்து, உங்கள் கைக்கு எட்டாத வெற்றி நிச்சயம் இந்த வெற்றிலையை கொண்டு போகும்போது கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்