- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த காரியத்திற்கு, இந்த கடவுளை வணங்கினால் தான் நீங்கள் நினைத்தது நடக்கும் தெரியுமா?

இன்றைய பரபரப்பான சூழலில் எதை தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் கடவுளின் ஞாபகம் என்பது தேவைப்படும் பொழுது மட்டுமே நமக்கு வருகிறது. இப்படி இருந்தால் அவர் எப்படி நமக்கு வரும் துன்பங்களை நீக்கி பாதுகாப்பு தருவார்? கூப்பிட்ட குரலுக்கு முதலில் ஓடோடி வருபவர் கடவுள் தான். சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் அப்பறம் தான் வாருவார்கள். துன்பம் வரும் பொழுது மட்டுமே கடவுளை நினைப்பது பெரிய பாவமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை ஒரு போதும் செய்யாமல் இருங்கள்.

நாம் ஒரு காரியத்திற்காக வெளியில் செல்லும் போது குறிப்பிட்ட கடவுளை நினைத்து வணங்கி விட்டு செல்வது என்பது அந்த காரியத்திற்கான வெற்றியை நமக்கு உடனடியாக பெற்றுத் தரும். அந்த வகையில் எந்த காரியத்திற்காக? எந்த கடவுளை வணங்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

எந்த காரியத்திற்கும், விநாயகரை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப் பார்த்தால் முருகரை வழிபட்டாலும் ஜெயம் நிச்சயம் தானே? அதுவல்ல சூட்சமம். எந்தக் கடவுளை வணங்கினாலும் நமக்கு நன்மைகள் நடக்கும். வெற்றி கிடைக்கும் தான் என்றாலும் குறிப்பிட்ட காரியத்திற்காக குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கி விட்டு செல்வது சிறப்பான பலனை தருவதாக சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன.

உதாரணத்திற்கு பணம் சார்ந்த விஷயத்திற்காக, பணம் கொடுக்கவோ, அல்லது வாங்கவோ நீங்கள் வெளியில் செல்வதானால் ஸ்ரீ மஹாலட்சுமியை வணங்கிவிட்டு சென்றால் செல்லும் காரியம் வெற்றி பெறும் என்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு.

- Advertisement -

நீங்கள் வெளிநாடு செல்ல இருக்கிறீர்கள் என்றால் எம்பெருமான் ஈசன் தலையில் பிறைசூடிய சந்திரன் இருப்பது போல் இருக்கும் படத்தை அல்லது விக்ரஹத்தை வணங்கி விட்டு செல்வது சிறப்பான பலனை தரும். எந்தவிதமான தங்குதடையின்றி நீங்கள் செல்ல நினைக்கும் காரியம் நிறைவேறும்.

ஜாதகம் பார்க்க, ஜோதிடம் தெரிந்து கொள்ள, ஜோதிடம் பயில, வரன் பார்க்க, திருமண விஷயம் பேசுவதற்காக போன்ற செயல்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டு சென்றால் நன்மைகள் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களுக்காக வெளியில் செல்பவர்கள் பைரவர், சக்கரத்தாழ்வார், காளி தேவி போன்ற தெய்வங்களை வணங்கி விட்டு செல்வது காரிய வெற்றி உண்டாக வழி வகுக்கும்.

- Advertisement -

கல்வி சார்ந்த விஷயங்களுக்கு வெளியில் செல்வதானால், அதாவது புதிதாக பள்ளியில், கல்லூரியில் சேர்க்க விரும்புபவர்கள், தேவையான நோட்டு, புத்தகங்கள் வாங்க போகும் பொழுது, பாடம் கற்க வெளியில் செல்லும் பொழுது, சரஸ்வதி தேவியையும், ஹயக்ரீவர் கடவுளையும் மனதார வேண்டிக் கொண்டு சென்றால் அறிவாற்றல் வளரும், மனம் ஒருமுகப்படும், ஜெயம் நிச்சயம்.

வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் பயணம் சிறப்பாக அமைய வெங்கடாஜலபதியை மனதார வழிபட்டு சென்றால் தடங்கலின்றி பயணம் சிறப்பாக முடிவுறும் என்பது நம்பிக்கை. ஆடம்பரப் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், வீடு, மனை மற்றும் வாகனம் போன்றவை வாங்க செல்வதற்கு முன் மகாவிஷ்ணுவை வணங்கி விட்டு செல்லுங்கள். மனதில் நினைத்த காரியம் நினைத்தபடியே வெற்றி பெறும்.

உடல்நிலை விஷயமாக மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அல்லது மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக வெளியில் செல்லும் பொழுது வைத்தீஸ்வரன் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபட்டு செல்வது நன்மை தரும். உயிருக்கு போராடுபவர்களை தன்வந்திரி பகவான் காக்கும் கடவுளாக இருந்து காப்பாற்றுவார். அவரை வணங்கிவிட்டு செல்வது நலம் பெற துணை புரியும்.

எந்த காரியத்திற்காக வெளியில் செல்லும் பொழுதும் திருநீற்றைப் பூசிக் கொண்டு உங்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு சென்றாலே அந்தக் காரியம் இயல்பாகவே வெற்றி பெறும். அதிலும் இப்படியாக குறிப்பிட்டு தெய்வங்களை தேர்ந்தெடுத்து வணங்கி விட்டு செல்வது மனதில் தன்னம்பிக்கை, தைரியத்தையும் வளர்க்கும்.

இதையும் படிக்கலாமே
அட! நகை அடமானம் போவதற்கு இது கூடவா ஒரு காரணமாக இருக்கும். பௌர்ணமி அன்று இப்படி செய்தால், நகை அடகு கடைக்கு போக வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -