நீங்கள் செல்லும் காரியம் வெற்றியாக கையில் கொண்டு போக வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன தெரியுமா? இதைக் கொண்டு சென்றால் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

vetrilai-pakku-lemon-vinayagar

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது மனதில் பலவித எண்ணங்கள் உடன் செல்வது உண்டு. செல்லும் காரியம் வெற்றி ஆகுமா? போகிற காரியம் நடக்குமா? நடக்காதா? கிடைக்க வேண்டியது கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற குழப்பங்களோடு வீட்டை விட்டு புறப்படுவோம். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தடையில்லாமல் ஜெயமாக இந்த 5 பொருட்களை கையில் வைத்துக் கொண்டு செல்லுங்கள். அது என்னென்ன பொருட்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

lemon

நீங்கள் ஒரு நுழைவுத் தேர்வுக்காக செல்கிறீர்கள் என்றால் எப்போதும் தன்னம்பிக்கையுடன் செல்ல வேண்டும். இந்த வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற யோசனையுடன் சென்றால் செல்லும் காரியம் எப்படி ஜெயமாகும்? இந்த வேலை நமக்கு தான் கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கையுடன் செல்லும் பொழுது நிச்சயம் அது ஜெயமாகும். அதற்கு உங்கள் கையில் ஒரு எலுமிச்சம் கனியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

வீட்டிலிருந்து புறப்படும் பொழுது கையில் எலுமிச்சை கனியுடன் வெளியில் சென்றால் உங்களை மற்றவர்கள் சூழ்ச்சியால் வீழ்த்த முடியாது. எலுமிச்சை கனி அந்த அளவிற்கு நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். பகைவர்கள், வேண்டாதவர்கள் என்று உங்களுக்கு பிரச்சனை கொடுக்கக் கூடியவர்கள் வெளியில் இருந்தால் நீங்கள் கட்டாயம் வெளியில் செல்லும் பொழுது எலுமிச்சை கனியை கொண்டு செல்லுங்கள், அவர்களால் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது.

vetrilai pakku

சுபகாரிய நிகழ்வுகளுக்காக வெளியில் செல்கிறீர்கள் என்றால் கையில் வெற்றிலை, பாக்கு கொண்டு செல்லுங்கள். வெற்றிலை, பாக்கு எப்பொழுதும் சுப காரிய வெற்றியை கொடுக்கும். மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு கையில் இருந்தால் நீங்கள் செல்லக்கூடிய சுபகாரிய நிகழ்வுகள் தடை இல்லாமல் வெற்றி பெறும். உதாரணத்திற்கு பெண் பார்க்கும் படலத்திற்கு செல்கிறீர்கள் என்றால் இது போல் வெற்றிலை, பாக்கை கையில் வைத்துக் கொண்டு செல்லலாம். மனதிற்கு பிடித்த வரன் நிச்சயம் அமையும்.

- Advertisement -

முதல் முறையாக ஒருவரை பார்க்க செல்கிறீர்கள் என்றால் உங்கள் கையில் ஒரே ஒரு ஏலக்காயை வைத்துக் கொண்டு செல்லுங்கள். ஏலக்காய் செல்லும் காரியத்தை வெற்றி அடைய செய்யும். நீங்கள் எதற்காக அவர்களை சந்திக்க செல்கிறீர்களோ! அந்த காரியம் நிச்சயம் ஜெயம் அடைய இப்படி செய்யலாம்.

Elakkai

வழக்கில், சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள், புதிய வீடு, மனை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், ஆடம்பரப் பொருட்களை வாங்குதல், நகை வாங்குதல், பஞ்சாயத்து போன்ற எந்த ஒரு விஷயத்திற்காக நீங்கள் வெளியில் சென்றாலும் செல்லும் காரியம் வெற்றி பெறுவதற்கு உங்களுடைய கையில் ஒரு மஞ்சளை வைத்துக் கொண்டு செல்லலாம். மஞ்சள் என்றால் விரலி மஞ்சள் எடுத்துக் கொண்டு செல்வது நல்ல பலன் தரும்.

virali-manjal

இந்த பொருட்கள் எல்லாம் மேற்கூறிய விஷயத்திற்காக வெளியே செல்லும் பொழுது தனித்தனியாகவும் இந்த விஷயங்களில் அல்லாத வேறு விஷயங்களுக்காக நீங்கள் வெளியில் செல்லும் பொழுது மொத்தமாக 5 பொருட்களையும் சேர்த்துக் கொண்டு செல்லலாம். இதில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்திகளைக் கொண்டுள்ளது. இது நம் கைகளில் இருக்கும் பொழுது நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். குழப்பங்கள் தடைபட்டு தெளிவான முடிவை எடுக்கக்கூடிய பாக்கியத்தை கொடுக்கும், எனவே நாம் செல்லும் காரியமும் இயல்பாக வெற்றி அடைகிறது என்பது நம்பிக்கை. நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே!