உங்கள் கர்மவினை தீர தேங்காய் ஓட்டில் இதை மட்டும் போட்டு வைத்தால் போதுமே!

eman-kottankuchi-shell

ஒவ்வொருவருடைய பிறப்பிற்கு பின்னாலும் கர்மவினை பயன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. மீண்டும் மீண்டும் மனித பிறப்பு எடுக்க அவர் அவர்களின் பாவ, புண்ணிய கணக்கின்படி ஏற்படும் கர்மவினை தான் காரணம். இந்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நம் வாழ்வு அமையப் பெறும் பொழுது இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி வருகிறது. கர்மவினை உண்மையில் என்ன செய்யும்? அதனை தவிர்க்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

sad-crying2

ஒரு மனிதனுடைய கர்மவினை அதிகமாக இருக்கும் பொழுது அவன் எடுக்கும் முயற்சிகளில் தொடர் தோல்விகள் ஏற்படும். பலரால் அவமானப்படவும், அவதிபடவும் நேரிடும்! என்ன தொழில் செய்ய நினைத்தாலும் அதில் வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும். எப்பொழுதும் மனதில் ஒருவித மன சஞ்சலம் இருக்கும். நிம்மதி என்பது இருக்கவே செய்யாது. புத்தி சரியாக யோசித்தாலும் மனம் அதனை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீண் விரயமாகும். சொத்துக்கள் ஏமாற்றி பறிக்கப்படும்.

உடலில் தீராத வியாதிகளும் துன்பங்களும் நேரும். ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த பிரச்சனையும் யாருக்கும் வருவதில்லை. ஒரு சில சமயங்களில் ‘நமக்கு என்ன குறைச்சல்!’ என்பது போலவும், ஒரு சில சமயங்களில் ‘என்னடா இது வாழ்க்கை!’ என்பது போலவும் இருக்கும். இன்பமும், துன்பமும் கலந்தது தான் மனித வாழ்க்கை. அதே போல பாவமும், புண்ணியமும் சேர்த்து தான் ஒவ்வொரு மனிதனும் செய்து கொண்டிருக்கிறான். இதில் பாவத்தை தவிர்த்து புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்வாழ்வு மலரும்.

birds

முன்ஜென்ம பாவ கர்ம வினைகள் தீர்வதற்கு சிறுசிறு ஜீவராசிகளுக்கு உணவளிப்பது சிறந்த பரிகாரமாக அமைகிறது. பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் பசியாற்ற கூடிய வகையில் நீங்கள் செய்யும் விஷயங்கள் அனைத்தும் கர்ம வினையை தீர்க்கும் பேராற்றல் கொண்டது ஆகும். பச்சரிசி மாவில் வீட்டில் கோலம் போட்டால் பூச்சிகளும், எறும்புகளும் வந்து சாப்பிட்டுவிட்டு போகும். அது போல ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை இருக்கும் ஜீவராசிகளுக்கு பசியும், தாகமும் மனிதன் கொடுத்த தண்டனைகள் ஆகும்.

- Advertisement -

வனத்தை அழித்து அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அவைகளின் பசியிலும், தாகத்திலும் கூட கர்ம வினைகள் அடங்கி இருக்கிறது. அதனை தீர்ப்பதற்கு அந்த மனிதனே முயற்சி செய்வது புண்ணியத்தை சேர்க்கும். உங்கள் வீட்டில் இருக்கும் கொட்டாங்குச்சிகளை இனி வெளியில் தூக்கி போடாதீர்கள். அவற்றில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவு தானியம் வைப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

coconut-shell

உங்கள் வீட்டில், வெளியிடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் கொட்டாங்குச்சியில் தண்ணீர் வையுங்கள். குறிப்பாக கொட்டாங்குச்சியில் நீங்கள் அரிசியை தானம் செய்யுங்கள். கொட்டாங்குச்சியில் அரிசியை போட்டு வைத்து மொட்டை மாடியில் வைத்து பாருங்கள். காக்கை, குருவிகள், புறாக்கள் அத்தனையும் உங்கள் வீட்டில் தஞ்சம் அடையும். மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டை சுற்றி ரீங்காரம் இடும். எந்த ஒரு வீட்டில் பறவைகளின் சத்தமும், விலங்குகளின் சப்தமும் அதிகமாக இருக்கிறதோ! அந்த வீட்டில் மகாலட்சுமி தேவி குடியிருக்கிறாள் என்பது அர்த்தம்.

water-for-crow

கர்மவினைகள் தீர்ந்து புண்ணியங்கள் சேர இது போல கொட்டாங்குச்சியில் அரிசி, தண்ணீர், தானியங்கள் என்று போட்டு மொட்டை மாடிகளில் கட்டி விடுங்கள். ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளுக்கு வாசலில் சிறிய பக்கெட்டில் தண்ணீர் வையுங்கள். மனதை வதைக்கும் உளைச்சல் நீங்கவும், தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களின் பயன் தீர்வதற்கு இது போல சில புண்ணியங்களும் சாஸ்திரங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.