பலரும் அறிந்திடாத கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம்

karnan3

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். எத்தனையோ தர்மங்கள் செய்தும் கர்ணன் ஏன் இறந்தான் ? இது எப்படி நியமாகும் ? இதற்கான விடை அறிய அவன் பூர்வ ஜென்மத்தை பற்றி நாம் அறிய வேண்டும்.

karnan

பூர்வ ஜென்மத்தில் அசுரர் குலத்தில் பிறந்தான் கர்ணன். அவன் பெயர் சஹஸ்ர கவசன். பிரம்மதேவனை நோக்கி கடுமையாக தவம் இருந்து ஒரு அற்புதமான வரத்தினை பெற்றான். அதன் படி அவனது உடல் 1000 கவசங்களால் போர்த்தப்பட்டிருந்தது.

அந்த 1000 கவசங்களையும் அவன் உடம்பில் இருந்து நீக்காமல் யாராலும் அவனை கொள்ளவே முடியாது. அந்த கவசங்களை நீக்குவதும் அவ்வளவு எளிதல்ல, அவன் உடம்பில் இருந்து ஒரே ஒரு கவசத்தை நீக்க வேண்டுமானால் கூட 12 வருடங்கள் கடுமையாக தவம் இருந்து பின் 12 வருடங்கள் தொடர்ந்து அவனோடு போரிட வேண்டும்.

karnan

 

- Advertisement -

ஒரு கட்டத்தில் சஹஸ்ர கவசனின் கர்வம் தலைக்கேற அவன் தேவர்களையும் மக்களையும் துன்புறுத்த துவங்கினான். இதனால் தேவர்கள் மகா விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். தேவர்களை காக்க முடிவு செய்த விஷ்ணு, நர நாராயணர்களாக அவதரித்தார். நரன் 12 வருடங்கள் தவம் புரிய, ராராயணன் சஹஸ்ர கவசனோடு தொடந்து போரிடுகிறார். இது பல நூறு வருடங்கள் தொடர, ஒரு கட்டத்தில் சஹஸ்ர கவசனுடைய 999 கவசங்கள் அறுத்தெறிய படுகிறது.

karnan

இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கையில் பிரம்ம பிரளயமே ஏற்பட்டுவிடுகிறது. அதனால் சஹஸ்ர கவசம் மீதமுள்ள ஒரு கவசத்தோடு சூர்யலோகத்தை சென்றடைகிறான். அதன் பின்னர் தனது மறு ஜென்மத்தில் ஒரு கவசத்தோடு சூரிய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் அவதரிக்கிறான் சஹஸ்ர கவசன்.

Shri-Krishna

மீதமுள்ள அந்த ஒரு கவசத்தையும் அறுத்தெறிய வேண்டும் என்பதற்காகவே மஹாவிஷ்ணு பல முயற்சிகள் எடுத்து அதை இந்திரன் மூலம் அருத்திரிந்தார். பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் சென்றது, 12 வருட தவத்திற்கு சமமாக கருதப்படுகிறது. அதன் பலனாகவே அர்ஜுனனால் அவனை கொள்ள முடிந்தது.

karnan

கர்ணன் எத்தனையோ புண்ணியங்கள் செய்திருந்தும் அவன் பூர்வ ஜென்ம பாவமானது அவனை நல்லோரிடம் சேர விடவில்லை. அதோடு அவன் பாவ வினையே அவன் இறப்பிற்கும் காரணமாக இருந்தது.

ஆன்மிகம் கதைகள், மந்திரங்கள் என ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெற எங்களுடைய பிரத்யேகமான தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயனடையுங்கள்.