ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்

pregnancy-symptoms-tamil

தாய்மை என்பது பெண்ணினத்துக்கு மட்டுமே கிடைத்த ஒரு இறை நிலைக்கு ஒப்பான பேறு ஆகும். உயிரினங்கள் அனைத்துமே தாயின் கருவறையில் உருவாகி, ஒவ்வொரு உயிருக்கு இருக்கும் இயற்கை அமைப்புக்கு ஏற்ற வாறு இம்மண்ணில் பிறக்கின்றன. அதிலும் மனித இனத்தில் ஒரு பெண் தன் கருப்பையில் ஒரு குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுப்பது, ஒரு யோகி இறைவனை காண இருக்கும் கடுந்தவத்தை விட மேலானது என நமது மறை நூல்கள் போற்றுகின்றன. திருமணமான பெண்கள் அனைவருமே ஒரு குழந்தையை பெற்று தாயாக வேண்டும் என விரும்புவர். அதற்கு அவர்கள் கர்ப்பம் தரித்தல் அவசியமாகிறது. அந்த வகையில் ஒரு பெண் கர்பம் அடைந்ததற்கான சில முதற்கட்ட அறிகுறிகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Pregnancy symptoms

கர்ப்பம் அறிகுறிகள் 1 : மாதவிடாய் நிற்பது
பெண்களுக்கு மாதந்தோறும் கருவடையாத சினை முட்டைகள் அவர்களின் கருப்பையிலிருந்து உதிரத்துடன் வெளியேறும் செயல் மாதவிடாய் எனப்படும். இது ஒவ்வொரு மாதமும் நிகழ வேண்டிய ஒன்று. இது மூன்று மாதங்களுக்கு மேல் திருமணமான ஒரு பெண்ணுக்கு வெளியேறவில்லை என்றால் அது அப்பெண் கர்பமடைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு சில நேரங்களில் வேறு சில காரணங்களால் கூட மாதவிலக்கு நிர்ப்பதுண்டு. உதாரணத்திற்கு வேலைப்பளு அதிகரித்தல், வேலையில் அதிக அளவு டென்ஷன், அதிகமாக கவலை கொள்ளுதல், மன அழுத்தம் என இன்னும் சில காரணங்களால் கூட கருமுட்டை சரியான நேரத்தில் வெளியேறாத நிலை உண்டாகும். இது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள சில நோய்கள் காரணமாக கூடு கருமுட்டை வெளியேற்றம் சரியான நிலையில் இருக்காது. உதாரணத்திற்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்கள், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படும். ஆகையால் மாதவிலக்கு நின்றால் அதற்க்கு கருத்தரிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளலாம்.

கர்ப்பம் அறிகுறிகள் 2 : மூச்சு திணறல்
நீண்ட தூரம் நடக்கையில் அல்லது மாடிப்படி ஏறுதல் போன்ற சமயங்களில் திடீரென மூச்சி திணறல் ஏற்பட்டால் அது கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு சுவாசம் தேவை படுவதால் இந்த மொச்சை திணறல் சில நேரம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதனால் பாதிப்பு இருக்காது.

Pregnancy symptoms

- Advertisement -

கர்ப்பம் அறிகுறிகள் 3 : மசக்கை

மசக்கை என்பது ஒரு விதமான உடல் சோர்வு ஆகும். இதை மருத்துவ உலகில் ‘மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். கருத்தரித்த ஆரம்பகாலத்தில் பெண்களால் காலையில் விரைந்து செயல்பட முடியாது. இன்னும் சிறிது நேரம் உறங்கினால் நன்றாக இருக்கும் என்ற மனநிலை ஏற்படும். ஆனால் இந்த உணர்வுகள் காலையில் மட்டுமே இருக்கும்.

காலை உணவை உண்ட பிறகு அந்த உணவு செரிக்காமல் நெஞ்சிலே தங்குவது போன்ற ஒரு உணர்வு இருக்கும். இதன் காரணமாக குமட்டல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மசைகை என்பது கருத்தரித்த வாரம் முதலே இருக்கலாம் அல்லது ஒரு மாதம் கழித்து கூட இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஏற்றவாறு இந்த நிலை உண்டாகும். இந்த மசக்கை ஏற்படுவதற்கான காரணம், கருத்தரித்த பெண்களின் உடலில் அதிக அளவில் சுருக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹர்மோனே. உடலில் ஏற்படும் சில உடனடி மாற்றத்தால் இரைப்பையின் இயக்கம் இயல்பை விட சற்று குறைகிறது. இதனாலேயே உணவு ஜீரணம் ஆகாமல் நெஞ்சிலே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மாதவிலக்கு நிற்பது, குமட்டல், மசக்கை போன்ற உணர்வு ஒருசேர இருந்தால் அதை கருத்தரித்ததற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பம் அறிகுறிகள் 4 : தலைவலி
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஏற்படும் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அடிக்கடி திடீரென தலைவலி ஏற்பட்ட அதுவும் கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இதை மட்டுமே வைத்து ஒரு பெண் கர்பம் தரித்திருப்பதை உறுதிப்படுத்த முடியாதது.

Pregnancy symptoms

கர்ப்பம் அறிகுறிகள் 5 : தலைச்சுற்றல்

ஒரு பெண் கருத்தரித்திருப்பதாக கருதப்பட்டால், கர்ப்பம் தரித்திருக்கும் ஆரம்ப காலங்களில் அப்பெண்ணுக்கு தலைச்சுற்றல் போன்ற நிலை அவ்வப்போது உண்டாகும். இதுவும் கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

Pregnancy symptoms

கர்ப்பம் அறிகுறிகள் 6 : அடிவயிறு பெருத்தல்

ஒரு பெண்ணின் கருப்பை அடிவயிற்று பகுதியில் இருப்பதால் அக்கருப்பையினுள் கரு உருவாகியிருந்தால், சில வாரங்களில் அடிவயிறு உப்ப தொடங்கும். மேலும் அடிவயிற்றில் எடைகூடியது போல் ஒரு உணர்விற்கும்.

Period pain

 

கர்ப்பம் அறிகுறிகள் 7 : அடிக்கடி சிறுநீர் கழித்தல்

ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும். இது ஒரு முக்கிய கர்ப்ப கால அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த அறிகுறியானது கருத்தரித்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிறகு ஏற்படும். கருத்தரித்த பிறகு அந்த கருவானது சிறுநீர் பையின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் அதன் காரணமாகவே இந்த உணர்வு ஏற்படும்.

Toilet

கர்ப்பம் அறிகுறிகள் 8 : வாந்தி

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களின் உடலிலிருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவதற்காக வாந்தி வர துவங்குகிறது. தொடர்ந்து குமட்டல் வாந்தி போன்றவை இருந்தால் அதுவும் கர்ப்பம் தரித்தலின் அறிகுறியாக இருக்கலாம்.

Pregnancy symptoms

கர்ப்பம் அறிகுறிகள் 9 : உணவின் மீது விருப்பும், வெறுப்பும்

இந்த கர்ப்பம் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் சில வகை உணவுகளின் மீது வெறுப்பு ஏற்படும். இக்காலத்தில் உடலில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றங்களினால் ஒரு சில பெண்களுக்கு புளிப்பு மிகுந்த உணவுகளை அதிகம் உண்ண தோணும்.

Sugar control food Tamil

கர்ப்பம் அறிகுறிகள் 10 : சோர்வு

கர்ப்பம் தரித்த பெண்கள் சுலபமாக சோர்ந்து விடுவார்கள். எந்த ஒரு வேலையில் இருந்தாலும் சுலபத்தில் சோர்வடைந்து, எங்கேயாவது அமர்ந்து விடுவார்கள்.

Pregnancy symptoms

கர்ப்பம் அறிகுறிகள் 11: மார்பகங்களின் இறுக்கம்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக்கூடிய பெண்களின் மார்பகங்கள், இறுக தொடங்கினால் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம். அதே போல மார்பக காம்பு நீண்டு, தொட்டால் வலிப்பது போன்ற உணர்வு இருக்கும். சில நேரங்களில் வேறு சில காரணங்களால் கூட மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு கருப்பையில் கட்டி ஏற்பட்டாலும் மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் மற்ற அறிகுறிகள் ஏதும் இன்றி மார்பகத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Pregnancy symptoms

இதையும் படிக்கலாமே:
கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை ?

இது போன்ற மேலும் பல கர்ப்ப கால தகவல்கள் மற்றும் தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have pregnancy symptoms in Tami. This can also be called as Karpam symptoms or Karpam home test or Karpam arikurigal in Tamil.