பூஜை செய்யும் கற்பூரத்தில் இவ்வளவு விஷயம் செய்ய முடியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

karpooram
- Advertisement -

நாம எப்பவுமே கற்பூரத்தை சாமி கும்பிடும் போது மட்டும் தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கற்பூரத்தை வைத்து நிறைய வீட்டு பயன்பாடுகள் நம் வீட்டில் நாம் செய்ய முடியும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே என்று வருத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தெரிந்தவர்கள் இதில் இல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளலாம். அப்படி கற்பூரத்தை வைத்து நம் வீட்டில் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

dhanalakshmi

முதலில் ஒரு வீடானது எப்பொழுதும் தெய்வீக மணம் உடன் இருக்க வேண்டியது மகா லட்சுமி கடாட்சத்தை உண்டாக்க அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான். விளக்கேற்றும் போது மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் வீடு தெய்வீக மணமுடன் இருப்பதற்கு இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய பௌலில் தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு கற்பூரத்தை நொறுக்கி சேர்த்து மின் விசிறிக்கு கீழே வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நேரடியாக அதன் மீது படும் காற்றின் வாயிலாக வீடு முழுவதும் தெய்வீக மணத்துடன் நல்ல நேர்மறை எண்ணங்களை உருவாக்கக் கூடிய ஆற்றல்கள் நமக்கு தருபவையாக இருக்கும்.

- Advertisement -

நாம் துவைத்து மடித்து வைத்திருக்கும் துணி அலமாரியில் அல்லது பீரோவில் பூச்சிகள் தொல்லை வராமல் இருப்பதற்கு கற்பூரத் துண்டை துணியில் முடித்து மூலை முடுக்குகளில் வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரி அல்லது பிரோ முழுவதும் வாசனையாகவும் இருக்கும். பூச்சிகள் தொல்லையும் அண்டாது. இதை நேரடியாக அப்படியே வைத்தால் அதிக மணமுடன் வெகு விரைவாகவே கரைந்து விடும்.

karpooram

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் ஒரு சிறு துண்டு கற்பூரத்தை தண்ணீரில் நன்கு கரைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து நன்கு குலுக்கி விட்டு தினமும் எறும்பு வரும் இடங்களிலெல்லாம் ஸ்ப்ரே செய்து வந்தால் சில நாட்களிலேயே எறும்பு தொல்லையிலிருந்து முழுமையாக நீங்கள் விடுபடலாம். பெரும்பாலும் ஜன்னல் மற்றும் வாசல்படி, பாத்திரம் கழுவும் இடங்களிலெல்லாம் வந்து தொல்லை தரும். அந்த இடங்களில் எல்லாம் அடிக்கடி ஸ்ப்ரே செய்து கொண்டே வாருங்கள்.

- Advertisement -

கை, கால் வலி, உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, மார்பு சளி போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு கற்பூரம் மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். சிறிதளவு கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து அந்த எண்ணெயை சூடு பறக்க வலி இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக கை மூட்டு பகுதியின் உட்புறமும், கால் மூட்டுப் பகுதியின் உட்புறமும் சூடு பறக்க தேய்த்தால் வலியெல்லாம் பறந்து விடுவது போல் நீங்கள் உடனடியாக உணர முடியும்.

cockroach

சமையலறையில் சிறிய கரப்பான்பூச்சிகள் தொல்லை நிறைய இருக்கும். எல்லோரும் தூங்கிய பிறகு ஒவ்வொன்றாக எட்டிப் பார்க்கும். இதை நாம் திடீரென்று இரவில் முழித்து தண்ணீர் குடிக்கும் போது குடுகுடுவென ஓடுவதைப் பார்த்திருப்போம். இது போன்ற பூச்சி தொல்லைகள் நீங்குவதற்கு இரண்டு ஸ்பூன் வினிகருடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு துண்டு கற்பூரத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து சமையலறையின் அடுப்பு பகுதி, சிலிண்டர் இருக்கும் இடம், செல்ப் போன்ற இடங்களில் எல்லாம் ஸ்ப்ரே செய்து விட்டால் போதும். ஒரு கரப்பான் பூச்சி கூட சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காது.

- Advertisement -

books

நீங்கள் புத்தகம் அடுக்கி வைக்கும் அலமாரி அல்லது பைகளில் சிறிதளவு கற்பூரத்தை நொறுக்கி ஆங்காங்கே போட்டு வைத்தால் புத்தகத்தை அரிக்கும் பூச்சிகள் எதுவும் வராமல் தடுக்கலாம். இதனால் எத்தனை வருடம் ஆனாலும் உங்கள் புத்தகம் பாழாகாமல் அப்படியே பத்திரமாக இருக்கும்.

clean

நீங்கள் வீடு துடைக்கும் பொழுது சிறிதளவு கற்பூரத்தையும் தண்ணீரில் சேர்த்து கலந்து கொண்டு வீடு துடைத்தால் வீடு முழுவதும் வாசமாகவும், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்ட சுத்தமான தரை நமக்கு கிடைக்கும். கற்பூரத்தில் கிருமி மற்றும் பூச்சிகளை அழிக்கும் தன்மை உண்டு.

pachai-karpooram

பாத்திரம் கழுவும் இடத்தில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு இரவில் அனைத்து பாத்திரங்களையும் கழுவியதற்குப் பின் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைக்கலாம். கற்பூரத்தில் இத்தனை பயன்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இதில் நீங்களும் உங்களுக்கு தேவையான டிப்ஸை பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
கொடுமை செய்யும் ‘மாமியாருக்கு’ கருட புராணத்தின் படி, நரகத்தில் என்ன தண்டனை தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -