தீய எண்ணங்களும் தீய பழக்கங்களும் விலக கற்பூரவள்ளி பரிகாரம்

varahi karpooravalli
- Advertisement -

இன்று புதன்கிழமை உடன் சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி திதி. இதை புதஷ்டமி என்று கூறுவோம். இன்றைய தினம் வாராகி அம்மனை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. வாராகி அம்மனை எதற்கெல்லாம் வழிபடலாம் எதற்கெல்லாம் வழிப்படக்கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. நமக்கு எது வேண்டுமோ அதை கேட்டும் எது வேண்டாம் என்று நினைக்கிறோமோ அது விலக வேண்டும் என்றும் வாராகி அம்மனிடம் நாம் வழிபாடு செய்யலாம். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நினைத்து கற்பூரவள்ளி இலையை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கணவனிடம் இருக்கக்கூடிய தீய பழக்கங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று நினைக்கும் மனைவி இந்த பரிகாரத்தை செய்யலாம். பிள்ளையிடம் இருக்கக்கூடிய தீய பழக்கங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் விலக வேண்டும், தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும், திருமண தடை விலக வேண்டும், குழந்தை பாக்கியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது ஒன்றே ஒன்றுதான் அதுதான் கற்பூரவள்ளி இலை. ஒரே ஒரு கற்பூரவள்ளி இலை இருந்தால் போதும் மாலை 6 மணிக்கு முன்பாக இந்த இலையை பறித்துக் கொள்ள வேண்டும். ஆறு மணிக்கு மேல் எந்த செடியில் இருந்தும் எந்த பூவையும் இலையையும் பறிக்கக் கூடாது. இந்த இலையை பறிப்பதற்கு முன்பாக அந்த செடியிடம் மானசீகமாக நன்மைக்காக உன்னுடைய இலையை பறிக்கிறேன் எனக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பறிக்க வேண்டும்.

இரவு 9:00 மணிக்கு மேல் ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த கற்பூரவள்ளி இலையை வைத்து அதற்கு மேல் பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு இந்த அகல் விளக்கை உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் எடுத்துச் சென்று காட்ட வேண்டும். பச்சை கற்பூரம் கரைந்து விட்டது என்றால் மறுபடியும் புதிதாக பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அனைத்து அறைகளிலும் காட்டி முடித்துவிட்டு உங்கள் வீட்டின் மையப் பகுதியில் வைத்து அந்த அகல் விளக்கை சுற்றி வீட்டில் இருக்கும் அனைவரும் அமர வேண்டும். ஒரு நிமிடமாவது அனைவரும் அமர்ந்து அந்த தீபத்தை பார்க்க வேண்டும். பிறகு இதில் இருக்கக்கூடிய சாம்பலை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளும் விலகி அவர்கள் நல்லவர்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

அதிக அளவில் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும். இலையை ஒவ்வொரு நாளும் பறிக்க வேண்டும் மொத்தமாக படித்து வைத்து உபயோகப்படுத்த கூடாது தீட்டு நேரங்களில் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே முன்னேற்ற தடை விலக பரிகாரம்

வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி இந்த முறையில் வழிபாடு செய்ய கெட்ட எண்ணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நீங்கி நன்மைகள் உண்டாக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -