நீங்கள் இழந்த சொத்துகள், பொருட்களை திரும்ப பெற இவற்றை செய்யுங்கள்

karthaveeryarjuna

அனைவருமே மிகக் கடுமையாக உழைத்தோஅல்லது உங்களுக்குத் தெரிந்த தொழில், வியாபாரம் செய்தோ பணம் எனும் செல்வத்தை ஈட்டுகின்றனர். அப்படியே ஈட்டுகின்ற பணத்தை தங்களுக்கும், தங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் உதவுகின்ற வகையில் சொத்துகளை வைக்கின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் நமக்காக வாங்கி வைத்த சொத்துக்கள் பல சில மனிதர்களின் சூழ்ச்சிகளால், நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் நமக்குரிய சில பொருட்கள் நம்மை அறியாமல் திருடப்பட்டு விடுகிறது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக இருப்பது தான் கார்த்தவீர்யார்ஜுன ஹோமம். அந்த கார்த்தவீரியார்ஜுன ஹோமம் செய்யும் முறை குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthaveeryarjunar

புராணங்களின் படி கார்த்தவீர்யார்ஜுனன் என்பவர் ஆயிரம் கரங்கள் கொண்ட ஒரு அரசனாக வாழ்ந்தார். சிலர் இவரை தெய்வமாகவும் கருதுகிறார்கள். இந்த கார்த்தவீர்யார்ஜுனன் தத்தாத்திரேயர் மகரிஷியின் சீடர்களில் ஒருவராவார். துஷ்ட சக்திகள் அனைத்தையும் அழிக்க வல்ல சக்தி கொண்டவராக கார்த்தவீர்யார்ஜுனன் இருக்கிறார். அந்த கர்த்தவீர்யார்ஜுனின் நல்ல அருளைப் பெறுவதற்கு செய்யப்படுகின்ற ஹோமமே கார்த்தவீரியார்ச்சுனன் ஹோமம் ஆகும். உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான். வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அதேபோன்று சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் துதிக்க வேண்டிய மந்திரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Karthaveeryarjuna homam in Tamil. It is also called as Poorvika sothu in Tamil or Homangal in Tamil or Homam pooja benefits in Tamil or Homangal palangal in Tamil.