- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை கார்த்திகை 1, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு

நாளை கார்த்திகை 1, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு

- Advertisement -

பெரும்பாலானவர்களுக்கு இந்த வழிபாடு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சமீப காலமாக விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பற்றி நிறைய ஜோதிடர்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் சொல்லுகின்றார்கள். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. இந்த தேதிகள் எல்லாம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்ய நம்முடைய தலையெழுத்து மாறும்.

சில பேர் தலையெழுத்தில் வாழ்க்கையில் கடைசிவரை கஷ்டம் தான் என்று எழுதி இருக்கும், அவர்களுடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் தாறுமாறாக விளையாடியிருக்கும். சில பேர் வாழ்க்கையில் இதுவரை நல்லதே நடந்திருக்காது. இனிமேலும் நல்லது நடக்க வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை இருந்தால், இந்த விஷ்ணுபத்தை புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டு முறையை செய்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

சரி இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பற்றி நமக்கு முதன் முதலில் சொன்னது யார்? என்பதை பற்றி தெரிந்து கொண்டு, பிறகு பெருமாள் வழிபாட்டை நாளைய தினம் எப்படி செய்வது என்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ‘சத்குரு வெங்கட்ரமண சித்தர்’ இவர் தான் முதன் முதலில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பற்றி மக்களுக்கு கூறியுள்ளார்.

விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு

இந்த சித்குரு ஆசிரமம் திருவண்ணாமலையில் இன்றும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை சனிக்கிழமையோடு சேர்ந்து இந்த கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்திருப்பது மிக மிக சிறப்பு. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள், அந்த நாளிலேயே விஷ்ணு பதி புண்ணிய காலம் வந்திருக்கிறது. இந்த நாளில் வழிபாட்டை மேற்கொண்டால் விஷ்ணுவும் பத்தியும் சேர்ந்து நமக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார்கள்.

- Advertisement -

அந்த பெருமாள் பெருமாளின் மனைவி பத்மாவதி தாயார். அதாவது மகாலட்சுமி தேவியும் நமக்கு ஆசிர்வாதத்தை வழங்குவார்கள். கார்த்திகை 1ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணியிலிருந்து காலை 10:30 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது. நள்ளிரவு ஒன்று முப்பது மணிக்கு நம்மால் பெருமாளை சந்திக்க முடியாது. ஆகவே சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 10:30க்குள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். கையில் 27 புஷ்பங்களை எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் இந்த நாளில் பெருமாளை 27 முறை வலம் வர வேண்டும்.

அப்படி வளம் வரும்போது எண்ணிக்கையை கணக்கு வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு பொருள் நமக்கு தேவை. கொடிமரத்தோடு இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளை சேவித்து விட்டு, கொடி மரத்திலிருந்து உங்களுடைய சுற்றுக்கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். முதல் சுற்று முடிந்தவுடன் கொடிமரத்த அடியில் ஒரு பூவை வைத்து விடுங்கள்.

- Advertisement -

கையில் இருக்கும் மொத்த பூவும் தீரும் போது 27 சுற்று கணக்கு ஆகிவிட்டது என்று அர்த்தமாக்கும். கோவிலை வலம் வரும் போது ஓம் நமோ நாராயணா, கோவிந்தா, பெருமாளே என்று பெருமாளின் நாமத்தை சொல்லிக் கொண்டே கோவிலை வலம் வர வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து சிறிது நேரம் பெருமாள் கோவில் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை பெருமாளிடம் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர்க்கும் பௌர்ணமி தீபம்

சந்தோஷத்தோடு வீடு திரும்புங்கள். இவ்வளவுதான் வழிபாடு இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தவறாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில், பெருமாள் கோவிலில் நம்பிக்கையோடு செய்கிறீர்களோ அவர்களுடைய தாறுமாறான தலை எழுத்து மாறி, வாழ்க்கை தங்கம் போல ஜொலிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்