ஸ்மார்ட் டிப்சுன்னா அது இப்படித்தான் இருக்கணும். தீஞ்சு போன தோசைக்கல்லை ஒரே நிமிடத்தில் சரிசெய்து, ஒரே நிமிடத்தில் சூப்பர் தோசை வார்ப்பது எப்படி?

dosa-tava
- Advertisement -

நம்முடைய அன்றாட உணவில் பெரும்பாலும் முதல் இடம் பிடிப்பதில் இந்த தோசையும் ஒன்று. நம் வீட்டில் சாப்பாடு செய்யாமல் கூட இருப்போம். ஆனால் தோசை வார்த்தால் இருக்கவே மாட்டோம். சில சமயம் அடுப்பில் கல்லை வைத்து விட்டு மறந்து விடுவோம். அந்த தோசைக்கல் தீஞ்சு, கருகிப் போய் விடும். அதன் பின்பு அந்தக் கல்லில் தோசை வார்ப்பது சிரமமாக இருக்கும். சிலபேர் தோசையை ஊற்றி விட்டு அந்த தோசையை கருக விடுவார்கள். அதன் பின்பு அந்த தோசையை எடுத்து விட்டு அடுத்த தோசை ஊற்றுவது மிக மிக சிரமமாக இருக்கும்.

dosa-tava1

கருதிய தோசைக்கல்லில் தோசை வார்த்தால், கட்டாயம் அடுத்த தோசையும் ஒட்டிக்கொள்ள தான் செய்யும். இப்படி தோசைக்கல் அதிகப்படியாக காய்ந்து தீஞ்சு போய்விட்டால், அதை உடனடியாக சரி செய்வது எப்படி. ஒரு ஸ்மார்ட்டான டிப்ஸ் உங்களுக்காக.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் பல் தேய்க்கும் பேஸ்ட் போதும். இந்த தோசை கல்லை சரி செய்ய. ஒரு பச்சை கலர் சாதாரண ஸ்க்ரப்பரில் இரண்டு பின்ச் அளவு பேஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம். தோசைக்கல் முழுவதும் அந்த நாரில் இருக்கும் பேஸ்டை பரவலாகத் தடவி லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்து விட வேண்டும். கருகிப் போன அத்தனை பிசுபிசுப்பும் உடனடியாக நீங்கிவிடும். அதன்பின்பு சோப்பு போட்டு தோசைக்கல்லை கழுவ வேண்டாம். வெறும் தண்ணீர் ஊற்றி தோசை கல்லை நன்றாக கழுவி விட்டு, தோசை வார்த்து பாருங்கள். உங்களுக்கே தெரியும்.

dosa-tava2

சிலபேர் நினைக்கலாம் பேஸ்ட் வாடை அந்த தோசைக்கல்லில் வருமா என்று, நிச்சயமாக வராது. அப்படியே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பேஸ்ட் போட்டு வெறும் தண்ணீரில் தோசைக்கல்லை கழுவி விட்டு, அதன் பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து, லேசாக தூள் உப்பை தோசைக்கல்லில் ஒருமுறை நன்றாக தூவி, உப்பை ஒரு துணி கொண்டு துடைத்துவிட்டு அதன் பின்பு தோசை வார்த்தால், எந்த ஒரு வாசமும் வராது. தோசை, கல்லில் ஒட்டாமல் வரும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

இதே டூத் பேஸ்டை வைத்து இன்னொரு கிளீனிங் டிப்பை நாம் தெரிந்து கொள்வோம். அயன் பாக்ஸ் கிளீனிங். அயன்பாக்ஸ் அடிப்பக்கத்தில் சிலசமயம் கருப்பு கருப்பாக கரை படித்து இருக்கும். அதாவது அயன் பாக்ஸ் நீண்டநாட்கள் பயன்படுத்திக் கொண்டே இருந்தால், பழைய அயன்பாக்ஸ் ஆக இருந்தால், அயன் பாக்ஸ்க்கு அடிப்பக்கத்தில் திட்டு சேர்ந்து விடும் அல்லவா.

iorn-box

அந்த அயன் பாக்ஸ் அடிப்பக்கத்தில் கொஞ்சமாக பேஸ்டை நன்றாக உங்கள் விரல்களாலேயே தடவி, கொஞ்சமாக தண்ணீரை ஸ்பிரே செய்து, நன்றாக உங்கள் விரல்களாலேயை தேய்த்து விட்டு விடுங்கள். (சும்மா இரண்டு சொட்டு தண்ணீர் போதும்.) அப்படியே ஒரு காய்ந்த துணியை வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பேஸ்ட் முழுவதையும் துடைத்து எடுத்துவிடுங்கள். அயன்பாக்ஸ் அடிப்பக்கம், ஒரு நிமிடத்தில் சுத்தமாகி விடும்.

iorn-box1

நம்ப மாட்டீங்க, புதுசாக வாங்கிய அயன்பாக்ஸ் அடிப்பக்கம் எப்படி இருந்ததோ அதே போல் மாறிவிடும். கரண்டில் போட்டுவிடலாம் இதை ட்ரை பண்ண வேண்டாம். சாதாரணமாக அயன் பாக்ஸை சூடு செய்யாமலேயே இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

kannadi

இதேபோல் உங்கள் வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி, அல்லது நாம் பயன்படுத்தும் மூக்குக்கண்ணாடி இவைகளில் தேவையற்ற அழுக்குகள் படிந்து இருக்கும்போது, அந்த கண்ணாடியின் மேல் கொஞ்சமாக பேஸ்டை போட்டு தடவி, அதன் பின்பு காய்ந்த துணியால் துடைத்து விட்டால் கண்ணாடி பளபளவென புதுசு போல மாறிவிடும். குறிப்பாக உங்க மூக்கு கண்ணாடிக்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -