கருமாரியம்மன் 108 போற்றி

Mariamman-1

மனிதன் என்றுமே தனித்து வாழ முடியாது. இதற்காக தான் திருமணம், குடும்பம் போன்றவை நமது சமுதாயத்தில் ஏற்படுத்த பட்டன. நமக்கு இறுதிவரை துணையிருப்பது நமது குடும்பம் தான். சிலருக்கு பல காரணங்களால் அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமே பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உடல் மனரீதியான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன். அவளின் புகழ்பாடி இயற்றப்பட்ட 108 போற்றி துதிகள் இவை.

Amman-temple

கருமாரியம்மன் 108 போற்றி

ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி

ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி

amman

- Advertisement -

ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி

ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி

ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி

Amman

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி

ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி

amman

ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.

தாய் தன் குழந்தையை காப்பது போல் நம்மை காப்பவள் கருமாரியம்மன். அவளை துதிக்கும் இந்த 108 போற்றி துதிகளை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக உங்கள் வீட்டு பூஜையறையிலேயோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று, இந்த 108 போற்றிகளை கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறிய நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும் மனக்கவலைகள் நீங்கும்.

Amman silai

புராணங்களின் படி சிவனில் பாதியாகிய சக்தி உலகில் அதர்மங்கள் எல்லை மீறி சென்ற சமயம், அவற்றை அழித்து தர்மத்தை நிலைநாட்டச் செய்வதற்காக இப்பூமியில் கருமாரியம்மனாக பிறப்பெடுத்தாள். அப்போது தன்னை உளமார பிராத்திப்பவர்களுக்கு நன்மைகள் அனைத்தையும் வழங்குவேன் என்றும், தீயவர்கள் அனைவரையும் அவர்களின் வினைகளுக்கு ஏற்றவாறு தண்டிப்பேன் என வாக்களித்தாள். யாரெல்லாம் ஸ்ரீ கருமாரியம்மனை உபாசிக்கிறார்களோ அவர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட துன்ப நிலைகளும் ஏற்படாது என்பது ஆன்றோர்களின் வாக்காகும்.

இதையும் படிக்கலாமே:
சக்தி வாய்ந்த அங்காளம்மன் ஸ்லோகம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் பலவற்றை படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

English Overview:
Here we have Karumariamman potri in Tamil or karumariamman 108 mantra in Tamil. It is also called as Karumariamman 108 mantra lyrics in Tamil.