புதிய கருப்பு பூஞ்சை! கொரோனா நோயாளிகளை குறி வைத்து தாக்குகிறதா? அதன் முதன்மை அறிகுறிகள் என்னென்ன?

black-fungus1
- Advertisement -

ஏற்கனவே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் மூன்றாம் அலையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் புதிதாக ‘கருப்பு பூஞ்சை’ என்கிற நோய் தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி மேலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே அதிகம் தாக்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயின் முதன்மை அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

black-fungus

இந்தியா முழுவதும் 1000திற்கும் மேற்பட்டோருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. அதில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இது மருத்துவ ரீதியாக மியூகோர்மைகோசிஸ்(mucormycosis) என்கிற பெயர் கொண்டுள்ளது. இந்த நோயானது எல்லோருக்கும் வருவது கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு தான் இது அதிகம் வருகிறது. கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பதிப்படைந்திருக்கும் நிலையில் இந்த நோய் அவர்களுக்கு எளிதாக வருகிறது.

- Advertisement -

பொதுவாக நோய்களுக்கான மருந்தை எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அந்நேரத்தில் மற்ற சில பூஞ்சை தொற்றுகளும் எளிதாக உடலுக்குள் புகுந்து கொள்ள ஏதுவாகிறது. இந்த கருப்பு பூஞ்சை பெரும்பாலும் காற்றில் இருக்க கூடியவை தான். மனிதர்கள் சுவாசிக்கும் பொழுது இவை உடலிற்குள் செல்வது இயல்பு தான். மனித உடல் இதை எளிதில் அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் சாதாரணமாக இருப்பவர்களுக்கு இதன் மூலம் பாதிப்புகள் இல்லை. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடல் நிலை பழைய நிலையை அடைய சில காலம் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது.

eyes

மூக்கு பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் இப்பூஞ்சை தொற்று அதி விரைவாக உடலின் பல பகுதிகளுக்கும் பரவி மூளையை பாதித்து இறுதியாக மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் பொதுவாக தூசி அதிகம் நிறைந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். அதேபோல அழுக்கு அதிகம் இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

நாட்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், வேறு நோய்களுக்காக அதிகம் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து காணப்படுபவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அதிக காலம் இருப்பவர்கள் போன்றவர்களை எளிதாக இந்நோய் தாக்கி விடுகிறது எனறு IMCR கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

nose0

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன? மூக்கடைப்பு ஏற்படுவது, கண்கள் சிவந்து காணப்படுவது, கண்களில் வீக்கம், பார்வை மங்குதல், மூச்சுத் திணறல், காய்ச்சல், மார்பு வலி, முகம் வலித்தல் ஆகிய அறிகுறிகள் தென்படும் பொழுது அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

eyes1

இந்த நோய் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கும் என்றாலும் இந்தியாவை பொறுத்த வரையில் பலருக்கும் கண்களில் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால் சில குறிப்பிட்ட உறுப்புகளை நீக்கும் அளவிற்கு இதன் தீவிரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

sugar control

இந்நோய் எல்லோரையும் எளிதாக தாக்குவது இல்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பாதிக்கிறது. எனவே வருமுன் காப்பதே சிறந்தது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்வது நலம் தரும்.

- Advertisement -