கருப்பு உளுந்தில் ஆரோக்கியமான பூரி செய்வது எப்படி?

poori.
- Advertisement -

ஆரோக்கியம் தரும் பருப்பு வகை இந்த கருப்பு உளுந்து என்று சொல்லி, கருப்பு உளுந்தில் களி செய்து கொடுத்தாலோ, அல்லது கஞ்சி காய்ச்சி கொடுத்தாலோ யாராவது சாப்பிடுவார்களா. நிச்சயம் கிடையாது. குழந்தைகள் இந்த மாதிரி கருப்பு உளுந்தை சமைத்துக் கொடுத்தால் சாப்பிடவே மாட்டாங்க.

அதுவே கருப்பு உளுந்து சேர்த்து பூரி செய்து கொடுத்து பாருங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் எல்லோருக்கும் ஆரோக்கியம் தரும்படியான ஒரு ரெசிபி இது. கருப்பு உளுந்து பூரி செய்வது எப்படி. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காய பொடி – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கோதுமை மாவு – 2 கப்.

செய்முறை

முதலில் இந்த கருப்பு உளுந்தை ஊற வைக்க வேண்டும். முழு கருப்பு உளுந்தாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வச்சிருங்க. 7 லிருந்து 8 மணி நேரம் அது ஊறட்டும். உடைத்த கருப்பு உளுந்தாக இருந்தால் 2 அல்லது 3 மணி நேரம் ஊறினால் மட்டுமே போதும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க.

- Advertisement -

ஊற வைத்த இந்த கருப்பு உளுந்தை அந்த மிக்ஸி ஜாரில் போட்டு, பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள், உப்பு, எல்லாவற்றையும் போட்டு அரைக்கணும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ரொம்ப தண்ணீராக அரைக்க கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு, இந்த மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை அந்த மாவில் போட்டு, நன்றாக கலக்க வேண்டும். மாவுக்கு தேவையான அளவு மட்டும் இதில் உப்பு போட்டுக்கோங்க. ஏற்கனவே மசாலா அரைக்க உளுந்தோடு உப்பு போட்டு இருக்கோம்.

- Advertisement -

தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த பூரி மாவை பிசைந்து கொள்ளணும். இறுதியாக இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி மாவின் மேலே தடவி விட்டு, இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செஞ்சுக்கோங்க. இனிமே எப்போதும் பூரி செய்வது போலவே இந்த பூரியை சுட்டு எடுக்கணும். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: ஆவாரம் பூ சட்னி செய்முறை

கொஞ்சம் திக்காக இந்த மாவை தேய்த்து எடுத்து, சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான கருப்பு உளுந்து பூரி தயார். இந்த உளுந்துடன் சில மசாலா பொருட்களையும் சேர்த்து அரைத்து இருப்பதால் இந்த பூரியை குழந்தைகள் சும்மா கொடுத்தாலே விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு சைட் டிஷ் ஆக வெஜ் கிரேவி, நான் வெஜ் கிரேவி எதை வேண்டும் என்றாலும் பரிமாறலாம். அது உங்களுடைய விருப்பத்தை பொறுத்தது. இது ஆரோக்கியம் தானே. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -