முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் மிகவும் முக்கியமான உறுப்புகள் தான் என்றாலும் ஒருவரை பார்த்தவுடன் நம் கண்ணிற்கு முதலில் தெரிவது அவர்களின் உதடு தான். அந்த உதடு பளிச்சென்று இருக்கும் பொழுது அவர்களின் முகமே பளிச்சென்று இருப்பது போல் நமக்கு தோன்றும். ஆதலால் தான் உதட்டிற்கு சாயம் தடவிக்கொள்ளும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையாகவே தயாரிக்க கூடிய உதட்டுச் சாயத்தை பற்றியும் அதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மையை பற்றியும் தான் பார்க்கப் போகிறோம்.
மிகவும் மிருதுவான உறுப்புகள் என்று பார்க்கும் பொழுது அதில் முதலிடம் பிடிப்பது உதடு தான். மேலும் உதட்டில் வேர்வை சுரப்பிகள் எதுவும் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உதட்டை நாம் முறையாக பராமரிக்காவிட்டால் அதனுடைய இயற்கையான நிறம் மாறி உதடு கருப்பாகிவிடும். அதிகமாக லிப்ஸ்டிக் போடும் நபர்களுக்கு உதடு கருப்பாகிவிடும்.
அது மட்டுமல்லாமல் சிகரெட் பிடிக்கும் நபர்களுக்கும் உதடு கருப்பாகும். மேலும் உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்காமல் உதட்டை முறையாக பராமரிக்காமல் இருப்பவர்களுக்கும் உதடு கருப்பாகிவிடும். என்னதான் கலராக இருந்தாலும் உதட்டின் நிறம் சரியாக இருந்தால் தான் அந்த முகம் அழகாக தெரியும். சரி இப்பொழுது உதட்டின் நிறத்தை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
இயற்கையிலேயே உதட்டிற்கு நிறம் தரக்கூடிய ஒன்றுதான் பீட்ரூட். ஒரு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பீட்ரூட்டின் தோலை சீவி விட்டு சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். பிறகு கால் டம்ளர் அளவிற்கு காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டியை பயன்படுத்தி பீட்ரூட் சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பீட்ரூட் சாரை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் சுத்தமான ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த சாறு ஆறிய பிறகு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி குறைந்தது 2 மணி நேரமாவது ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். இதுதான் நம் உதட்டிற்கு நிறத்தை தரக்கூடிய பொருள். உதட்டிற்கு நிறத்தை தருவதற்கு முன்பாக உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்க வேண்டும் அல்லவா? அப்பொழுதுதான் முழுமையான பலனை பெற முடியும்.
இந்த இறந்த செல்களை நீக்குவதற்கு ஒரு பவுலை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை சர்க்கரையை சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக திக்கான பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதை எடுத்து உதட்டில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி ஐந்து நிமிடம் தேய்ப்பதன் மூலம் உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். தயாரித்து வைத்திருக்கும் கிரீமை உதட்டில் தடவ வேண்டும்.
இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் முடிகளை நீக்கும் பீல் ஆஃப் மாஸ்க்
தினமும் இந்த கிரீமை இரவு படுப்பதற்கு முன்பாக தடவுவதன் மூலம் இயற்கையிலேயே உதட்டின் நிறம் மேன்மைப்படும். இதில் எந்தவித கெமிக்கலும் சேர்க்கப்படாததால் இதை மறுபடியும் திருப்பி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.