இந்த பொடி தோசையை சாப்பிட்டு பாருங்கள். உடல் எடை குறைய இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

podi dosai
- Advertisement -

உடல் கட்டுக்கடங்காத சதைப்பற்றுடன் இருப்பதையே உடல்பருமன் என்கின்றோம். பொதுவாகவே நமது உடல் கொழுப்பினை சேகரித்து வைப்பதென்பது இயல்பான செயலாகும். ஆனால் அளவிற்கு அதிகமான கொழுப்பு உடலில் சேரும்பொழுது அது உடல் நலத்திற்கு ஆபத்தாக அமைகிறது. கொழுப்பு அதிகம் சேர்வதற்கு முக்கிய காரணங்கள் உடல் உழைப்பு இல்லாமை, மற்றும் தவறான உணவு பழக்கமாகும். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவின் மூலமே உடலிலுள்ள கொழுப்பினை எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றியே இந்தபதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம்.

dosai

உடல் பருமனால் அவதிப்படும் பலர் உடல் எடையை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றியும் சரியான பலன் கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒருவரின் உடல் நிலைக்கு ஏற்பவும், அவரின் உணவு முறைகளுக்கு ஏற்பவும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டும் தான் சரியான பலன் கிடைக்கும். ஆனால் இந்த கருவேப்பிலை பொடியை உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் பருமனுக்கு காரணமான கொழுப்புகள் அனைத்துமே கரைந்து வெளியேற ஆரம்பிக்கும்.

- Advertisement -

கறிவேப்பிலை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை – 10 கைப்பிடி, கருப்பு உளுத்தம் பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், வெள்ளை எள் – 50 கிராம், மிளகு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு டம்ளர்,கடலை மாவு – அரை டம்ளர், சீரகம் – அரை ஸ்பூன்.

karuveppilai

செய்முறை:
அடுப்பின் மீது கடாயை வைத்து, கடாய் நன்கு சூடானதும் அதில் கருவேப்பிலையை சேர்த்து அவை நன்றாக மொறு மொறுவென்று கையில் எடுத்து நசுக்கும் பொழுது நொறுங்கும் பதத்தில் வரும் வரை நன்றாக வறுத்து விட்டு, பின்னர் அதனை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இவை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்தெடுக்க வேண்டும். பின்னர் வெள்ளை எள், மிளகு, அவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அவற்றையும் வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வறுத்தெடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

karuveppilai podi

பின்பு ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம் இவற்றுடன் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து இந்த மாவினை பயன்படுத்தி தோசை ஊற்ற வேண்டும். இதனை காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.

dosai

தினமும் பயன்படுத்தும் தோசை மாவுடனும் இந்த கருவேப்பிலைப் பொடியை சேர்த்து தோசை சுடலாம். கருவேப்பிலை பொடியை முட்டையுடன் சேர்த்து ஆம்ப்லெட்டாக செய்தும் சாப்பிடலாம். இந்த பொடியை சாதத்தடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்தும் சாப்பிட்டலாம். அனைத்துமே சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இவை அனைத்திலுமே கருவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் கரைந்து காணாமல் போகும்.

- Advertisement -