ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இப்படி ருசியான கருவேப்பிலை, கொத்தமல்லி துவையலை ஒரு முறை செய்து பாருங்கள்

karuveppilai
- Advertisement -

தினமும் மதிய உணவை சமைக்கும் பொழுது அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது காய்கறி பொரியல் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில நேரங்களில் அசைவ உணவையும் சமைத்து வைப்போம். ஆனால் இப்படி மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் இவற்றை வைத்து சுவையான துவையல் செய்து கொடுக்கலாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் இதனை எந்த வகை குழம்பு சாதத்துடன் வேண்டுமென்றாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு சூப்பரான சுவையில் இருக்கும். இந்த கருவேப்பிலை, கொத்தமல்லி துவையலை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்துக் கொண்டால், உடம்பில் ரத்த சோகை, முடி உதிர்வு பிரச்சினை இவை அனைத்தும் சரியாகிவிடும். வாருங்கள் இந்த சுவையான கருவேப்பிலை, கொத்தமல்லி துவையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி, கொத்தமல்லி தழை – இரண்டு கைப்பிடி, வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், புளி சிறிய துண்டு – ஒன்று, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4.

- Advertisement -

செய்முறை:
முதலில் கறிவேப்பிலையை உருவி வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எர்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் காய்ந்த மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு சிறிய துண்டு இஞ்சி மற்றும் அலசி வைத்துள்ள கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இவற்றையும் நன்றாக வதக்கவேண்டும். பிறகு இவற்றுடன் சிறிய துண்டு புளி, உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, சிறிது நேரம் இவற்றை ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் மறுபடியும் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்து, இந்த தாளிப்பை துவையுலடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -