இந்த சங்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கிறதா? அப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயங்கள். இவற்றை செய்ய தவறினால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி விடுவோம்.

sangu
- Advertisement -

ஆன்மீக வழிபாட்டிலும், கடவுளுக்கான பூஜைகளிலும் சங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இந்த வலம்புரி சங்கு எந்த ஒரு வீட்டின் பூஜை அறையை அலங்கரிக்கின்றதோ அந்த வீட்டில் குபேர கடாட்சம் நிறைந்து மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இவ்வாறு புனிதமான வலம்புரி சங்கினை பலரது வீடுகளிலும் வாங்கி வைத்து அதற்கு எவ்வாறு பூஜை செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டு விடுவார்கள். இவ்வாறு வலம்புரி சங்கினை பூஜைகள் செய்யாமல் அப்படியே வைத்துக் கொள்வது அந்த வீட்டிற்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் பிரச்சனையை மட்டுமே கொடுக்கும். தீராத துன்பங்கள் சூழ்ந்து விடும். எனவே இந்த சங்கிற்க்கு எவ்வாறு முறையான பூஜைகள் செய்து அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sangu

வலம்புரி சங்கு:
குபேரனின் அருளையும், குபேர யோகத்தையும் பெற்றுத் தரும் வல்லமை படைத்தது இந்த வலம்புரி சங்கு. மாதம்தோறும் வரும் ஏகாதசி தினத்தில் இந்த வலம்புரி சங்கிற்கு அபிஷேகங்கள் செய்திடவேண்டும். பன்னீர், பால், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், திருநீறு மற்றும் மலர்கள் இவற்றினால் அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஏகாதேசியன்று வலம்புரிசங்கிற்கு பூஜை செய்பவர்களின் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகி அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேரும்.

- Advertisement -

பூஜை அறையில் வலம்புரி சங்கு வைக்கும் முறை:
வலம்புரி சங்கினை பூஜை அறையில் வைக்கும் பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு அந்த தண்ணீரில் சங்கு மூழ்குமாறு வைக்க வேண்டும். சங்கின் வாய்ப்பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.

guberan

பிறகு அந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள்தூளை தூவி விட வேண்டும். அதன்பின் ஒரு ரூபாய் நாணயத்தை சங்கினுள் வைத்துவிட்டு சிறிது துளசி இலைகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இதனை அப்படியே எடுத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு எப்பொழுதும் பூஜை செய்யும்பொழுது இந்த வலம்புரி சங்கிற்க்கும் தீப தூப ஆராதனைகள் செய்ய வேண்டும். இவ்வாறு சங்கை வழிபட்டு வருவதன் மூலம் குபேரரின் பேரருளை முழுவதுமாக பெற முடியும்.

- Advertisement -

இவ்வாறு சங்கு வைத்திருக்கும் தண்ணீரை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் மாற்றம் செய்ய வேண்டும். சங்கு வைத்திருந்த அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் இருந்தால் அவை வெளியே அகற்றப்படும் . குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும், ஓயாமல் அழுது கொண்டிருந்தாலும் இந்த மஞ்சள் நீரை லேசாக அவர்களின் முகத்தில் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் அவை உடனே சரியாகி விடும்.

abishegam

அதேபோல் சுவாமி சிலைகளுக்கு இந்த சங்கினை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். வீட்டில் இருக்கும் திருஷ்டிகள், கஷ்டங்கள் விலகி கடன் தொல்லைகள் அனைத்தும் மறைந்துவிடும். வீட்டில் தனம், தான்யம் பெருகிக் கொண்டே இருக்கும். இவ்வாறு நமது வீட்டில் எப்போதும் குபேரனின் அருள் நிறைந்திருக்க வலம்புரிசங்கிற்கு முறையாக பூஜைகள் செய்து நல்ல பலனை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்

- Advertisement -