கஷ்டம் என்று வரும்போது பூஜை அறையில் ஒரு சொம்பு தண்ணீரை இப்படி வைத்து பாருங்கள்! கஷ்டத்திற்காக தீர்வினை அந்த ஆண்டவனே உங்களுக்கு காட்டி விடுவான்.

pray

வீட்டில் குழப்பங்கள் கஷ்டங்கள் என்று வரும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது அந்த ஆண்டவன் தான். குறிப்பாக வீட்டில் கஷ்டம் இருந்தாலும் சரி, கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் தருணத்திலும் சரி, நாம் முதலில் நினைத்துக் கொள்ள வேண்டியது அந்த குலதெய்வத்தை. சந்தோஷம் வரும் போது குல தெய்வத்திற்கு நன்றி சொல்ல யாரும் மறக்கக்கூடாது. நன்றியை அந்த இறைவன் நம்மிடம் கேட்பதில்லை. இருப்பினும் சந்தோஷமான சமயங்களில் குலதெய்வத்தை நினைவுகூர்ந்து கொள்வது நம் குடும்பத்திற்கு நன்மையை தரும்.

praying-god

சந்தோஷத்தில் எவரொருவர் குலதெய்வத்தை மறக்காமல் நினைத்துக்கொண்டு, மனதார நன்றி சொல்கிறார்களோ, அவர்களுக்கு கஷ்டம் என்று வரும் போது குலதெய்வம் கூப்பிடாமல் வந்து உதவி செய்யும் என்பது உண்மையான ஒரு விஷயம் தான். வேண்டுமென்றால் நீங்கள் இதை சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

சரி, உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு மன கஷ்டம் பண கஷ்டம் அப்படி இல்லை என்றால் என்னவென்றே தெரியாமல் உங்களுடைய மனம் சஞ்சலத்தில் இருக்கின்றது. இந்த சமயத்தில் பூஜை அறையில் இறைவனிடம் எப்படி வேண்டுதல் வைக்கலாம். உங்களுடைய வீட்டில் செம்பில் உள்ள ஒரு சொம்பை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சொம்பு நிறைய நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரோடு கொஞ்சமாக 2 ஸ்பூன் அளவு பன்னீரையும் கலந்து கொள்ளுங்கள்.

sembu-sombu

வாசம் நிறைந்த அந்த தண்ணீரில் ஒரு ரூபாய் நாணயத்தை போடுங்கள். உங்களுடைய வீட்டில் வாசனை மிகுந்த எந்த பொருள் இருந்தாலும் இந்த தண்ணீரில் போடலாம். ஏலக்காய், பட்டை, லவங்கம், எதுவாக இருந்தாலும் ஒன்று என்ற எண்ணிக்கையில் இதன் உள்ளே போட்டுக் கொள்ளுங்கள். மா இலை, வேப்ப இலை, துளசி, வில்வம் இதில் எந்த இலை கிடைத்தாலும் அதில் ஒன்றை இந்த தண்ணீருக்குள் போட்டுக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து விட்டு, தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது உங்களது மனக்கஷ்டத்தை இறைவனிடம் மனதார சொல்லுங்கள். பூஜை அறையிலேயே ஒரு பலகையை போட்டு அமர்ந்து கொண்டு கண்களை மூடி தியானம் செய்த நிலையில் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

pachai-karpooram-yelakkai-sombu

இன்று நீங்கள் இந்த வேண்டுதலை வைத்தால் மறுநாள் பூஜை அறையில் சொம்பில் வைத்த தண்ணீரை எடுத்து ஏதாவது ஒரு செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் சேர்க்க வேண்டும். இதேபோல் பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. உங்களுக்கு மனது சரியில்லாத சமயத்தில் உங்களுடைய கஷ்டங்களை ஆண்டவன் சொல்லும் போது இந்தத் தண்ணீரை பூஜையறையில் வைத்தால் போதும்.

god siva

உங்களுடைய கஷ்டம், நீங்கள் மனதார அந்த ஆண்டவனிடம் சொன்ன கஷ்டம், கூடிய விரைவிலேயே சில நாட்களிலேயே, ஒரு நல்ல முடிவுக்கு வந்து விடும். உங்கள் கஷ்டத்திற்கான தீர்வினை அந்த ஆண்டவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நிச்சயமாக கொடுப்பான். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.