எதிர்பாராத சமயத்தில் கூட உங்கள் வீட்டிற்குள் எந்த கஷ்டமும் வராது. உங்கள் வீட்டில் இந்த 2 பொருட்களை சேர்த்து நான்கு திசைகளில் வைத்தால்.

nel

சிலபேரது குடும்பங்களில் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத கஷ்டங்கள் வந்து, குடும்பத்தில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். எந்த சூழ்நிலையிலும் நம் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டின் நான்கு திசைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நான்கு திசைகளில், எந்த திசையிலிருந்தும் எதிர்மறை ஆற்றல் நம் வீட்டிற்குள் நுழைந்து விடக்கூடாது. இதற்கு ஆன்மிக ரீதியாகப் தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம், என்பதைப் பற்றியும், கெடுதல் நம் வீட்டை விட்டு விலகிய பிறகு, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க பணப்பெட்டியில் எந்த பொருளை வைக்க வேண்டும், என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ginger - Inji

எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் பிரவேசிக்காமல் இருந்தாலே போதும். லட்சுமிகடாட்சம் நம் வீட்டிற்குள் குடி வந்து விடும். இது தான் எதார்த்தமான உண்மை. சரி, முதலில் நான்கு திசைகளில் வைக்க வேண்டிய அந்த இரண்டு பொருள் என்ன, அதை எப்படி வைக்க வேண்டும் தெரிந்து கொள்வோமா.

இஞ்சி, பாதரசம் தான் அந்த இரண்டு பொருட்கள். தாந்திரீக ரீதியாக இஞ்சிக்கு எதிர்மறை ஆற்றலை விரட்டக் கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. பாதரசம் எளிதில் எதிலும் ஒட்டா தன்மை உடையது. நேர்மறை ஆற்றலை தன்னுடன் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையும் இதற்கு உண்டு. இந்த பாதரசத்தை புது வீட்டிற்கு, வாசல் கால் வைக்கும் போது, அந்த நிலை வாசல்படிக்குள் வைக்கக்கூடிய பொருட்களின் பட்டியலில், சேர்த்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

patharasam

இஞ்சியை லேசாக இடித்து, நன்றாக உலர வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் இருக்கும் ஈரப்பதம் நீங்கிவிடும். அந்த இஞ்சியின் நடுவே கொஞ்சமாக பாதரசத்தை வைத்து, ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து, மனதார குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு இந்த முடிச்சை எடுத்து உங்கள் வீட்டின் நான்கு திசைகளில் கட்டிவிடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். பாதரசத்தை பார்த்து கையாளவேண்டும். அதை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

nel1

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு பின் 11 நாட்கள் கழித்து கொஞ்சமாக நெல்லை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த நெல்லை சிறிதளவு எடுத்து ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிந்து மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து வீட்டில் இருக்கும் வறுமை நிலை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு அந்த முடிவினை எடுத்து பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

mahalashmi3

இப்படி செய்யும்பட்சத்தில் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடித்த பின்பு நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் வீட்டில் வறுமை நீக்குவதற்கு மிக மிக சுலபமாக அமையும் என்பதுதான் இதனுடைய அர்த்தம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.