செவ்வாய்க்கிழமை என்றாலே அது முருகப்பெருமானுக்கு உரிய நாள். இந்த நாளில் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி எம்பெருமானை வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ பூஜை அறையில் விளக்கு ஏற்றி வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திரு உருவப்படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இருப்பினும் இந்த வழிபாடை செய்ய சில நேரங்களில் நேரமும் காலமும் நமக்கு ஒத்துழைக்காது. வழிபாடுகள் தவறும். அந்த சமயத்தில் நமக்கு இனம் புரியாத மனக்கஷ்டமும் இருக்கும். ஆக எப்பாடுபட்டாவது அந்த முருகனை வழிபாடு செய்து விடுங்கள். உங்கள் வழிபாட்டை தடுக்கக்கூடிய கெட்ட நேரத்தை தாண்டி, நீங்கள் வந்துவிட்டால் உங்கள் வாழ்வில் நல்லது நடந்து விடும்.
கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு, அந்த வழிபாட்டை தவறவிடும்போது பிரச்சனைகள் வந்து நம்மை சூழ்ந்து விடுகிறது. மன கஷ்டம் வந்துவிடுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் எல்லோருக்கும் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு. இந்த பதிவை படிக்கும் போது இந்த மந்திரத்தை ஒரு முறையாவது படிப்பீர்கள் அல்லவா. அப்போதே முருகனை வழிபட்ட புண்ணியம் உங்களை வந்து சேர்ந்துவிடும்.
நோய் நொடி இல்லாமல் வாழ செல்வ வளத்தோடு வாழ, குடும்ப சண்டைகள் இல்லாமல் வாழ, தீராத பண பிரச்சனை, தீராத கடன் சுமையிலிருந்து வெளிவர, செய்ய வேண்டிய எளிமையான முருகர் ஆன்மீகம் வழிபாடு. சொல்ல வேண்டிய எளிமையான முருகன் மந்திரம். முருகருக்கு பஞ்சாமிர்தம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அந்த பஞ்சாமிர்தத்தை மட்டும் இன்று நீங்கள் தயார் செய்து முருகப்பெருமான் முன்பு வைத்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் தீராத துன்பங்கள் தீர்ந்துவிடும். பஞ்சாமிர்தம் என்றால் பல வகையான பழங்களை வாங்கி போட்டு சிரமப்பட்டு நிறைய செலவு செய்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இரண்டே இரண்டு வாழைப்பழம், ஒரு மாதுளம் பழம், கொஞ்சம் தேன், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து அந்த நெய்வேதியத்தை இறைவனுக்கு வைத்தாலே போதும். அவன் மன திருப்தியோடு ஏற்றுக் கொள்வான். நிறைய பழ வகைகள் போட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. வீட்டில் இருக்கும் பழங்களை சேர்த்து இந்த பஞ்சாமிர்தம் செய்து விடுங்கள். பிறகு முருகனுக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகன் படத்திற்கு முன்பாக அமர்ந்து கண்களை திறந்து முருகனை தரிசனம் செய்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள் போதும்.
முருகப்பெருமானின் மந்திரம் :
ஓம் பாலசுப்ரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வரவர சுவாஹா!
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு யோகம் கிடைக்க வைகுண்ட ஏகாதசி வழிபாடு
பிறகு மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை வைத்து தீப தூப ஆராதனைகள் காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள உங்களுடைய மன கஷ்டம், மன பாரம் அப்படியே பாதியாக குறைந்து விடும். இன்றைய நாள் அத்தனை சிறப்பான நாளாக மாறும். பிரச்சனைகள் எல்லாம் பறந்து ஓடிவிடும். எத்தனை முறை அந்த முருகனின் பெருமைகளை சொன்னாலும் நம்முடைய வாய் ஓயாது. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா.