காலத்தால் வரும் கஷ்டத்தை வெல்ல வேண்டும் என்றால், கலியுகத்து கடவுளான கந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் ஒரே ஒரு வழி. கண்கண்ட தெய்வம் முருகனை வழிபாடு செய்யக்கூடிய ஒரு பழமையான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இப்போது பலவிதமான பரிகாரங்கள், பலவிதமான முறைகளில் வந்திருந்தாலும், இந்த பரிகாரத்திற்கு கொஞ்சம் பவர் அதிகம் தான்.
உங்களுக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். கஷ்டம் வந்த தடம் தெரியாமல் மறையும். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து விடுங்கள். ஒரு பேனாவை எடுத்து அந்த காகிதத்தின் மேலே துவக்கத்தில் “சரவணபவ” என்று எழுதி விடவும். அந்த காகிதத்தின் நடு பக்கத்தில் நட்சத்திர கோலம் போட்டுக் கொள்ளுங்கள். நட்சத்திர கோலத்தில் 6 முக்கோணங்கள் சுற்றிலும் இருக்கும் அல்லவா. அந்த முக்கோணத்திலும் உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும்.
உதாரணத்திற்கு இப்போது நீங்கள் வேலை இல்லாமல், பணத்திற்கு ரொம்ப கஷ்டப்படுறீங்க. பெரிய அவமானங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கஷ்டத்தை கொண்டு போய் அந்த கட்டத்திற்குள் எழுதக்கூடாது. “நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்க வழிகாட்டு” என்று அந்த ஆறு கட்டத்திற்குள்ளேயும் எழுதி, நடுவில் “ஓம்” என்ற வார்த்தையை எழுதி, இதை அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி உங்கள் வீட்டில் இருக்கும் முருகர் திரு உருவப்படத்தில் பாதத்தில், இந்த நூலை கட்டி விட வேண்டும்.
மஞ்சள் நூல் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள் போதும். முருகனது திரு உருவப்படத்தில் மேல் பக்கத்தில் போட்டால் அது மாலை போல இருக்கும். ஆனால் நீங்கள் எழுதிய இந்த கோரிக்கையை முருகர் கால் பாதத்தில் கட்டி விட வேண்டும் அவ்வளவுதான்.
இந்த பரிகாரத்தை செய்து முருகருக்கு செவ்வரளி பூ போட்டு விளக்கு ஏற்றி பிரார்த்தனையை செய்து கொள்ளுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து, நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். உங்களுடைய பிரச்சனையை முருகர் கூடிய சீக்கிரம் தீர்த்து வைப்பார். பிரச்சனை சரியான பிறகு, நல்ல வேலை கிடைத்த பிறகு, முதல் மாதம் சம்பளம் வாங்கி மகிழ்ச்சி அடைந்த பிறகு, அந்த மாலையை கழட்டி முருகன் கோவிலில் கொண்டு போய் ஏதாவது ஒரு மரத்தில் கட்டி விட்டு வந்து விடுங்கள் அவ்வளவுதான்.
அந்த காலத்தில் பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம், ஜமீன்தார்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை தகட்டில் செய்வார்கள். பிரச்சனை ஏதாவது இருந்தால் ஒரு தகட்டில் அவர்களுடைய பிரச்சினையை எழுதி, தெய்வத்தின் பாதத்தில் புதைத்து வைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் பரிகாரமாக இந்த பரிகாரம் இருந்து வந்தது.
அந்த பரிகாரத்தை இந்த காலத்திற்கு தகுந்தது போல பேப்பரில் எழுதி நாம் தெய்வத்தின் பாதத்தில் வைக்கின்றோம். இந்த பரிகாரத்தை, இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. பிரச்சனை வரும் போது செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் சண்டையாக இருந்தால், கணவன் மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று எழுதலாம், கடன் சுமை அதிகமாக இருக்கிறது என்றால், வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை எழுதி, முருகன் பாதத்தில் வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர வெண்ணெய் பிள்ளையார்
ஆரோக்கியம் தேவை என்று எழுதலாம். என்ன கேட்டாலும் முருகன் தட்டாமல் உங்களுக்கு கொடுத்து விடுவார். உங்களுக்கு முருகர் மீது நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரம், உங்களை தேடி வந்திருக்கும், கஷ்டம் தீர்க்கும் பரிகாரமாக நினைத்துக் கொள்ளுங்கள். என்றும் முருகனே துணை என்று வேண்டி இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.