கஷ்டம் உங்களை விட்டுப் போகாமல் இருக்க, வறுமை உங்களை வாட்டி வதைக்க, உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் செய்யும் இந்த 1 தவறு தான் காரணம்.

kitchen1
- Advertisement -

ஒரு வீட்டிற்கு பூஜை அறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த வீட்டின் சமையல் அறையும் முக்கியமான ஒரு இடம் தான். சொல்லப்போனால் பூஜை அறை, இல்லாத வீடுகள் உண்டு. வரவேற்பறையில் பூஜை அறையை வைத்துக்கொள்வார்கள். சமையலறை இல்லாத வீடு கிடையாது. இந்த சமையலறையை நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, நம்முடைய இஷ்டத்திற்கு நாம் மாற்றி அமைத்துக் கொண்டோம். நாகரிக வளர்ச்சியின் மூலம் வந்த இந்த மாற்றங்கள் கூட நம்முடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன மாற்றம்? அந்த மாற்றத்தினால் ஏற்படக்கூடிய கஷ்டத்தை சரி செய்ய, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kitchen

நாம் செய்யும் முதல் தவறு சமையல் அறையை எப்போதுமே ஈரமாக வைத்து இருப்பதுதான். எந்த வீட்டில் சமையல் அறையில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் பெண்களின் மனது நிலையற்ற தன்மையை பெறும். அந்த வீட்டில் பணமானது தண்ணீரில் கரைந்த பெருங்காயம் போல செலவாகிக் கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கு உரியது சமையலறை. பணம் காசுக்கு உரியவர் சுக்கிர பகவான். தன தானியத்தை வீட்டில் அளவில்லாமல் கொடுப்பவர் சுக்கிரபகவான். சந்திர பகவானுக்கு உரியது தண்ணீர். ஆக சுக்கிரன் சந்திரன் சேர்க்கை சமையல் அறையில் இருக்கும் போது, நீங்கள் சமையலறையில் தண்ணீரை ஊற்ற ஊற்ற உங்கள் கையில் இருக்கும் பணம், தனம் தானியம் எல்லாம் கரைந்து போகத்தானே செய்யும்.

kitchen-cleaning

அந்தக்காலத்தில் சமையலறையில் அதிகப்படியான தண்ணீரை புழக்கத்தில் வைத்திருக்கவில்லை. காரணம் சமையலறையில் தண்ணீர் வரும் குழாய் கிடையாது. பாத்திரத்தை புழக்கடையில் கொண்டு போய் தான் அலம்பி கொண்டு வந்து வைப்பார்களே தவிர, சமையல் அறையின் உள்ளே தண்ணீரை ஊற்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது.

- Advertisement -

சரி, இந்த காலகட்டத்திற்கு ஏற்ப நாம் சமையலறையில் சிங்கை வைத்துக் கொண்டதை தவறாக சொல்ல முடியாது. இருப்பினும் எப்போதுமே அந்த சிங்கிள் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. அந்த சிங்க் கசகசவென எப்போதுமே காயாமல் இருக்கக்கூடாது. பாத்திரம் கழுவ கூடிய சிங்கை எப்போதுமே சுத்தமாக பராமரித்து, அந்த இடத்தை காய்ந்த நிலையில் வைத்துக் கொண்டாலே போதும் வீட்டில் கஷ்டங்கள் வருவது குறையும்.

kitchen1

அடுத்தபடியாக சுக்கிரனின் அம்சம் கொண்டது, சுக்கிரனுக்கு உரியது வெந்தயம். வெந்தயத்தை உங்கள் வீட்டு சமையல் அறையில் வடகிழக்கு மூலையில் திறந்தபடி வைத்துவிடுங்கள். இந்த வெந்தயத்தை நீங்கள் சமையலுக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். திறந்திருக்கும் வெந்தயம் என்பதால் ஒரு முறை கழுவி விட்டு அதன் பின்பு, அதை சமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் வாஸ்து ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனையின் மூலமாகத்தான் பணம் காசு தங்கவில்லை என்றால் அது சரியாகிவிடும்.

vendayam

இதோடு மட்டுமல்லாமல் சமையலறை என்றாலே அந்த இடத்தில் சமைப்பதற்கு அடையாளமாக ஒரு கருப்பு நிறமாவது இருக்க வேண்டும். அந்த காலத்தில் அடுப்பில் சமையல் சமையல் அறையில் கருப்பு நிறம் இல்லாமல் இருக்கவே இருக்காது. சமையலறையில் எப்போதும் கருப்பு நிறத்தில், கறி வரும் அளவிற்கு நாம் இன்றைய சூழ்நிலையில் சமைக்க முடியாது.

முடிந்தவரை ஒரு அடுப்புக் கரியை கொண்டுவந்து சமையலறையில் எங்காவது ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் வீட்டில் வறுமையை போக்குவதற்கு ஒரு சிறந்த பரிகாரம். நம்முடைய வீட்டு வேலைக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்களை நாம் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும் இதன் மூலம் நமக்கு கஷ்டமும் அதிகமாகிக் கொண்டே தான் வருகின்றது. வாஸ்து ரீதியாக, கிரக ரீதியாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -