வீட்டில் தீராத கஷ்டங்கள், துயரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதற்கு பெண்கள் செய்யும் இந்த 2 தவறுகளும் ஒரு முக்கியமான காரணம் தான்.

women5
- Advertisement -

நம்முடைய நேரமும் காலமும் நன்றாகத்தான் இருக்கும். நம்முடைய ஜாதக கட்டத்தில் கூட சொல்லுமளவிற்கு பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. ஆனால் வாழ்க்கையில் இந்த கஷ்டங்கள் மட்டும் தீர்த்த பாடக இருக்காது. இதற்கெல்லாம் என்னதான் காரணம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கே தெரியாமல் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளின் மூலம், ஏற்படும் விளைவுகள் தான், பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது. நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இந்த இரண்டு தவறை செய்பவர்களாக இருந்தால், அதில் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். உங்களுடைய கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.

women2

பெரும்பாலும் நிறைய வீடுகளில் இந்த தவறை ஆண்களும் செய்வார்கள். பெண்களும் செய்வார்கள். ஆண்களை விட பெண்கள் இந்த தவறை அதிகமாக செய்வார்கள். அது எந்த தவறு. குளித்து விட்டு தலையைத் துவட்ட துண்டை பயன்படுத்துவார்கள். அந்த துண்டோடு வந்து வரவேற்பறையில் நாற்காலியின் மீது சோபாவின் மீது ஃபேன் காற்று வாங்க அமர்வார்கள். தலையை துவட்டி விட்டு அந்த ஈரத் துண்டை அப்படியே சோபாவின் மீது போட்டு வைத்து இருப்பார்கள். காலையில் போட்ட அந்த ஈரத் துண்டு அப்படியே மாலை வரை அங்கேயே ஈரத்துணி வாசத்தோடு இருக்கும். இது மிகப்பெரிய தவறு.

- Advertisement -

நிறைய பேர் வீட்டில் நாமே பார்த்து இருப்போம். வரவேற்பறையில் நாம் செல்லும் போதுதான் சோபாவின் மேலே உள்ள துண்டை எடுத்துவிட்டு நம்மை உட்கார வைப்பார்கள். டீப்பாயின் மேல் மடித்து வைத்திருக்கும் துணியை கொண்டுபோய் உள்ளே வைப்பார்கள். கணவன் காலையில் கழட்டிப் போட்ட லுங்கி கதவின் மேல் மேல் தொங்கும். பெண்களின் துப்பட்டா சோபாவில் கிடைக்கும். வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வரவேற்பறையில் உடுத்திய துணைகள், ஈரத் துணிகளை இப்படி இருப்பதும் முதல் காரணம் தான்.

women6

அடுத்தபடியாக தலையை துவட்டி விட்டு, தலையில் இருக்கும் சிக்கை எடுப்பதற்கு சீப்பை பயன்படுத்துவார்கள். அவசர அவசரமாக தலையில் உள்ள சிக்கை நீக்கிவிட்டு சீப்பில் இருக்கும் முடியோடு சீப்பை அப்படியே வரவேற்பறையில் அல்லது வேறு ஏதாவது இடத்தில் வைத்து விட்டு சென்றுவிடுவார்கள். மறுநாள் காலை தலை சீவும் வரை சீப்பில் முடி அப்படியே இருக்கும்.

- Advertisement -

இதைப் பெரும்பாலும் பெண்கள் தான் செய்வார்கள். சில வீடுகளில் ஆண்களும் இந்த தவறை செய்வார்கள். குளித்து முடித்துவிட்டு வந்து துண்டை கதவின் மேல் போடுவது, ஜன்னலின் மேல் மாற்றுவது, சோபாவின் மேல் போடுவது போன்ற தவறுகளை ஒரு வீட்டில் என்றைக்குமே செய்யக்கூடாது. ஈரத் துணி, உடுத்திய துணி இவைகளை வீட்டு வரவேற்பறையில் போடாமல், வீட்டிற்குள் வேறு ஏதாவது ஒரு இடத்தில் கொடிகட்டி தான் போட வேண்டும். அப்படி இல்லையா, நீங்கள் பயன்படுத்திய அந்தத் துண்டை குளியல் அறைக்கு எடுத்துச் சென்று துவைப்பதற்கு போட்டு விடுங்கள்.

comb

இதே போல் தலை சீவிய உடனேயே சீப்பில் இருக்கும் முடியை நீக்கி விட்டு சீப்பை கொண்டுபோய் கண்ணாடி முன்னாடி வைத்துவிடவேண்டும். தவிர வேறு எந்த இடத்திலும் சீப்பை வைக்கக்கூடாது. குறிப்பாக நிறைய பெண்கள் சீப்பை சமையலறை வரை கொண்டு போய்விடுவார்கள். இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள். தலைவாறும் சீப்பு சமயலறைக்கு செல்லக்கூடாது, ஆரோக்கிய ரீதியாக இது பெரும் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆன்மீக ரீதியாகவும் இது சில பிரச்சினைகளை உண்டுபண்ணும்.

women8

இதெல்லாம் ஒரு பிரச்சனையா காலம் காலமா எங்க வீட்ல இது தான் நடக்குது. நாங்க நல்லா இல்லையா. அப்படின்னு நிறைய பேர் கேப்பிங்க. ஆனால் இந்த தவறுங திருத்திக் கொண்டு பாருங்கள். இன்னும் ரொம்ப ரொம்ப நல்லாவே இருப்பீங்கன்னு சொல்லி இந்தப் பதிவை இதோடு முடித்துக் கொள்ளலாம்.

- Advertisement -