சூரியன் உதயமாகும் போதும், சூரியன் அஸ்தமனமாகும் போதும் தப்பி தவறி கூட பெண்கள் இதையெல்லாம் பேசிவிடக்கூடாது. குடும்பத்திற்கு நிச்சயம் கஷ்டம் வந்துவிடும்.

women3
- Advertisement -

சூரியன் உதயமாகும் நேரம் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம். நாம் எல்லோருக்கும் தெரியும். காலை 6:00 மணிபொழுது, மாலை 6:00 மணிபொழுது. இந்த இரண்டு நேரமும் தேவர்கள், தேவதைகளும் நடமாடக்கூடிய நேரம். இந்த பூமிக்கு விடியல் வரக்கூடிய நேரம். பூமியிலிருந்து வெளிச்சம் புறப்படக்கூடிய நேரம். இந்த நேரத்தில் நம்முடைய வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்து கொள்ளக் கூடாது, குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த நேரத்தில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றிய சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். காலை 6:00 மணி, மாலை 6:00 மணி, வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட வேண்டும். நம்மில் நிறைய பேர் இதை காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. காலை 6 மணிக்கு வீட்டில் இருப்பவர்களை எழுப்பும்போது பெண்களின் வாயால் சுப்ரபாதம் தொடங்கிவிடும். ‘மூதேவி மாதிரி தூங்குறீங்க. காலையில எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்ய மாட்டேங்கிறீங்க. வீடு எப்படி உருப்படும்’. இப்படிப்பட்ட வார்த்தைகள் நிறைய பெண்களின் வாயிலிருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக காலை சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் இந்த வார்த்தைகளை நீங்கள் குழந்தைகளையோ, கணவரையோ சொல்லி திட்டினால் அவர்களுக்கு அது அப்படியே பலித்து விடும். அவர்கள் நிஜமாகவே சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள். அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இந்த தவறை செய்யாதீங்க.

காலை எட்டு மணிக்குள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் கிளம்பி வேலைக்கு, பள்ளிகூடத்திற்கு சென்று விட்டார்கள். அதன் பின்பு நீங்கள் எதுவுமே பேச மாட்டீங்க. அமைதியாக உங்களுடைய வேலையை தொடங்குவீர்கள். மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வீடு திரும்புவார்கள் அல்லவா.

- Advertisement -

உங்களுக்கு டென்ஷன் பிபி ஏற தொடங்கி விடும். உடனே மாலை அந்தி சாயும் நேரம் வந்துவிடும். ஐந்து முப்பதிலிருந்து, ஆறு முப்பது ஏழு மணிக்குள், திரும்பவும் இப்படிப்பட்ட வார்த்தைகளை சில பெண்கள் பேச தொடங்கி விடுவார்கள். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தவுடன் நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லுவது தவறு கிடையாது.

இப்படி படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்தால், நிச்சயமாக உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நல்ல வேலை கிடைக்காது. நிறைய பணம் சம்பாதிக்க முடியாது. வாழ்க்கையில் நீ ரொம்ப கஷ்டப்படுவாய், என்று எதிர்மறையான வார்த்தைகளை சொல்லி பிள்ளைகளை திட்டாதீங்க. அது அப்படியே பளிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. குறிப்பா அம்மாக்கள், பிள்ளைகளை, கணவரை இப்படி எதிர்மறை வார்த்தைகளை சொல்லி காலை 6 மணி, சமயத்தின் போதும் மாலை 6 மணி சமையத்தின் போதும் திட்டவே கூடாது. எந்த நேரத்திலும் திட்டக்கூடாது. குறிப்பாக இந்த நேரத்தில் இப்படிப்பட்ட எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது. உங்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -