உங்களுக்கு இருக்கும் தொடர் பிரச்சனைக்கு என்னதான் காரணம்? இந்த 1 பொருளை வாங்கினால் நம் கஷ்டங்கள் எல்லாம் தீருமா?

temple-broom

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு வருத்தப்பட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அடுத்து என்ன செய்யலாம்? என்பது தான் முயற்சிக்க வேண்டும். ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே கர்மாவுடன் தான் பிறக்கிறான். கர்மா இல்லாத மனிதனுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. கர்மா இருப்பதால் தான் அவன் மீண்டும் பிறக்கிறான். இதனால் தான் வாழும் போதே நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. அந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறோம்? என்பதில் தான் சூட்சமங்கள் அடங்கியிருக்கிறது. நம் வாழ்க்கையில் இருக்கும் தொடர் பிரச்சினைகளுக்கு பரிகாரம் தான் என்ன? என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

chitraguptan

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் நிச்சயம் தண்டனை என்பது உண்டு. அது எப்பொழுது கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? என்பது தான் நமக்கு தெரிவதில்லை. எங்கோ! ஏதோ! ஒரு இடத்தில் நாம் செய்த தவறு இன்று நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். ‘தவறு செய்பவன் எல்லாம் நல்லா தானே வாழ்கிறான்’ என்கிற எண்ணமே தவறானது தான். தவறு செய்பவன் உண்மையிலேயே வேறு வகையில் நமக்கு தெரியாமல் துன்பப்பட்டு கொண்டு தான் இருப்பான். அல்லது விரைவிலேயே அவனுக்கு தீராத துன்பங்கள் நிச்சயமாக வரும்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஏற்கனவே முன் ஜென்மத்தில் அவன் செய்த கர்மங்களுக்கு உண்டான பலன்கள் கூறப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் தான் அவன் ஜனனம் நிகழ்கிறது. இது நன்கு கற்று தேர்ந்த ஜோதிடர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பரிகாரங்களும் உண்டு. அவற்றை தெரிந்து கொண்டு நாம் செய்வதால் குறைந்த பட்சம் இந்த நிகழ்கால வாழ்வில் ஆவது பிறப்பின் அர்த்தம் உணர்ந்து செயல்படலாம். அப்படி தங்கள் கர்ம வினைக்கு உரிய பரிகாரங்கள் தெரியாதவர்கள்! இந்த பொதுப் பரிகாரங்களை செய்து பார்க்கலாம். நிச்சயமாக சிறப்பான பலன்கள் உண்டாகும்.

mirro

நீங்கள் அடிக்கடி செல்லும் கோவில்களுக்கு தேவையான பொருட்களை தானமாக கொடுத்து உதவலாம். கோவிலில் இருக்கும் அர்ச்சகரிடம் கேட்டால் கோவிலுக்கு என்ன தேவை? என்பதை அவர் கூறுவார். அதை இறைவனுக்கு செய்யும் அர்ப்பணிப்பாக நினைத்து மனமுவந்து செய்து பாருங்கள். கர்ம வினைப் பாவங்கள் ஓரளவுக்கு குறைந்து உங்கள் கஷ்டங்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி மிகவும் விசேஷமானது. கண்ணாடி தேவைப்படும் கோவில்களுக்கு கண்ணாடியை வாங்கி கொடுப்பதனால் கர்மாக்கள் தீரும்.

- Advertisement -

கோவிலுக்கு அடிக்கடி தேவைப்படும் பொருட்களில் ஒன்று துடைப்பம். இன்னொன்று விளக்கு ஏற்றும் நெய். இந்த இரண்டு பொருட்கள் ஒரு கோவிலுக்கு அடிக்கடி தேவைப்படும் பொருளாகும். இதை நீங்கள் கேட்காமலேயே எந்த ஒரு கோவிலுக்கும் தாராளமாக வாங்கி கொடுக்கலாம். கோவிலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களையும் துடைத்து எறியும் என்பது நம்பிக்கை.

ghee

மிகுந்த மனவேதனையில் இருப்பவர்கள், தீராத துன்பம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், வாழ்க்கையையே வெறுத்து போன கட்டத்தில் இருப்பவர்கள் கோவில்களுக்கு துடைப்பம் அல்லது நெய் தானம் செய்யலாம். ஒரு முறை இவற்றை செய்ய ஆரம்பித்து விட்டால் உங்களுக்கே இறைவன் மீது ஒரு நம்பிக்கை வரும். மீண்டும் மீண்டும் உங்களை நீங்களே நல்ல பாதையை நோக்கி பயணிக்கும் படி திசை திருப்பி விடலாம்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.