- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை தீர்க்கும் துர்காஷ்டமி வழிபாடு

கஷ்டங்களை தீர்க்கும் துர்காஷ்டமி வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டத்தை அனுபவிப்பதற்காகத்தான் இந்த பிறவியை நாம் எடுத்தோம் என்று கூட கூறலாம். இந்த பிறவியை எடுத்ததன் காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான். நம்முடைய கர்ம வினைகள் கரைய வேண்டும் என்றால், அதற்குரிய பலாபலனை நாம் அனுபவிக்க வேண்டும். அதனால் தான் இந்த பிறவியில் நாம் பிறந்து நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்.

நம்முடைய கர்ம வினைகள் குறைய வேண்டும் என்றாலும் ஒரு சில சிறப்பு மிகுந்த நாட்களில் செய்யக்கூடிய வழிப்பாடும் இந்த கஷ்டங்களை தீர்க்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நாளாக தான் நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி திகழ்கிறது. இந்த அஷ்டமியை நாம் துர்காஷ்டமி என்று கூறுவோம். பொதுவாக நவராத்திரி வரக்கூடிய அஷ்டமியை துர்காஷ்டமி என்றாளூம் இந்த முறை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தருகிறது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்பது துர்கை அம்மனை வழிபாடு செய்வதற்குரிய கிழமையாக நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய துர்காஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்த சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுவதால் அன்றைய நாளில் நாம் துர்கை அம்மனை மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்தால் கூட நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அப்படிப்பட்ட ஒரு எளிமையான சிறப்பான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டங்கள் தீர வழிபாடு

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை துர்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம் அல்லவா? அதே போல் தான் இந்த முறையும் செவ்வாய்க்கிழமை ராகு காலமான மதியம் 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் துர்கை அம்மனை நாம் வழிபாடு செய்யலாம். ஒருவேளை அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாலை 5:30 மணிக்கு மேல் துர்கை அம்மனை வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டை ஆலயத்திற்கு சென்று செய்வதாக இருந்தாலும் செய்யலாம் வீட்டில் செய்வதாக இருந்தாலும் செய்யலாம். நம்முடைய வீட்டில் அம்மனின் படம் என்பது இருக்கும். அந்த அம்மனை துர்க்கை அம்மனாக நாம் பாவித்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த அம்மனுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அம்மனுக்கு சிவப்பு நிறத்திலான நெய்வேத்தியங்களை வைக்க வேண்டும் உதாரணமாக மாதுளம் பழம் முத்துக்கள், செவ்வாழைப்பழம், சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய கேசரி போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம். அதே போல் அம்மனுக்கு செவ்வரளி மலர்களை சாற்றுவது என்பது மிகவும் சிறப்பு. இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு குங்கும அர்ச்சனை செய்யும்பொழுது “ஓம் துர்க்கையே நமோ நம” என்னும் எளிமையான இந்த மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய சகல நன்மைகளும் உண்டாகும்

இதையும் படிக்கலாமே: நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த துர்காஷ்டமி நாளில் துர்கை அம்மனை எளிமையான முறையில் வழிபாடு செய்தால் கூட நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நற்பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்