- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாக

கஷ்டங்கள் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாக

- Advertisement -

சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் எந்த திருநாமங்களை கூறி வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானின் திருநாமங்கள் வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்றாக திகழ்வதுதான் மந்திர வழிபாடு. மந்திர வழிபாடு என்று கூறும் பொழுது சிவபெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன, சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் கூறுவதன் மூலம் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் சிவபெருமானின் திருநாமங்களையும் மந்திரமாக நாம் உச்சரிக்கும் பொழுது சிவபெருமானே நம்முடைய வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட திருநாம வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

சிவபெருமானுக்கு என்று பலவிதமான திருநாமங்கள் இருக்கின்றன. அந்த திருநாமங்களில் ஒரு சில திருநாமங்களை நாம் தொடர்ச்சியாக கூறும் பொழுது சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற முடியும். அந்த வகையில் ஜூலை மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாள் அன்று பிரதோஷ நேரத்தில் இந்த திருநாமங்களை மட்டும் நாம் தொடர்ச்சியாக கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். சிவபெருமானின் அருள் நமக்கு கிடைத்துவிட்டாலே அனைத்து தேவர்களின் அருளையும் நாம் பெற்றுவிட்டோம் என்று அர்த்தம். அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தோஷங்களும் விலகும்.

சிவபெருமானின் திருநாமங்கள்

“ஓம் பவாய நம
ஓம் ருத்ராய நம
ஓம் ப்ரடாய நம
ஓம் ஈசனாய நம
ஓம் சம்பவே நம
ஓம் சர்வாய நம
ஓம் சானாவே நம
ஓம் உக்ராய நம
ஓம் பக்ராய நம
ஓம் பரமேஸ்வராய நம
ஓம் மகா தேவாய நம”

- Advertisement -

இந்த திருநாமங்களை வீட்டு பூஜையறையில் அமர்ந்து கொண்டும் கூறலாம். சிவபெருமானின் ஆலயத்தில் அமர்ந்து கொண்டும் கூறலாம். பிரதோஷ நேரத்தில் கூறினால் கூடுதல் சிறப்பு உண்டாகும். சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். நெய்வேத்தியமாக வைப்பதற்கு எந்த பொருளும் இல்லை என்று நினைப்பவர்கள் சாதாரண தண்ணீரை மட்டுமாவது வைத்து இந்த திருநாம வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த தண்ணீரை அனைவரும் பகிர்ந்து உண்ணலாம்.

இதையும் படிக்கலாமே:  குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்பட

சிவ பெருமானுக்குரிய திருநாமங்கள் பல இருந்தாலும் அந்த திருநாமங்களில் ஒரு சில திருநாமங்களை மட்டும் நாம் தொடர்ச்சியாக பிரதோஷ நேரத்தில் உச்சரிக்கும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் சிவபெருமான் நீக்குவார். முழு நம்பிக்கையோடு சிவபெருமானின் திருநாமத்தை கூறி அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்