சிவபெருமானின் ஒரு அவதாரமாக திகழக்கூடியது தான் பைரவர் அவதாரம். பைரவர் தோன்றியது க்ர்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி அன்றுதான் என்பதால் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியை நாம் பைரவாஷ்டமி என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட தேய்பிறை அஷ்டமி என்பது நவம்பர் மாதம் 27ஆம் தேதி இரவு 10:31ல் இருந்து சனிக்கிழமை இரவு 11:45 வரை இருக்கிறது. இந்த நாளில் பைரவரை எந்த முறையில் வழிபட்டால் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவரவை அதிகரிக்கும் பைரவர்
காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், எதிர்மறை ஆற்றல்களும், எதிரிகள் தொல்லையும், செய்வினை தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சனீஸ்வர பகவான், ராகு, கேது போன்றவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் விலகும் என்று கூறப்படுகிறது. இதோடு காலபைரவரின் மற்றும் ஒரு அம்சமாக திகழக்கூடிய ஸ்வர்ண பைரவரை வழிபாடு செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவர்களுடைய வழிபாட்டை அஷ்டமி தினத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு தனி சன்னதியில் இருக்கக்கூடிய காலபைரவரை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு நேரத்தில் பூஜைகள் நடைபெறும். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் எந்த நேரத்தில் பூஜை நடை பெறுகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்திற்கு சென்று பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது பைரவருக்கு நெய் தீபங்களை ஏற்றி வைத்து செவ்வருதி மலர்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அப்படி அருகில் காலபைரவரின் ஆலயம் இல்லை என்று நினைப்பவர்கள் வீட்டில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தை வைத்தும் வழிபாடு செய்யலாம். சொன்ன ஆகர்ஷண பைரவரின் படம் இல்லை என்பவர்கள் கலசம் வைத்தோ அல்லது தீபம் ஏற்றி வைத்தோ அதில் சொர்ண பைரவரை ஆகர்ஷணம் செய்து வழிபாடு செய்யலாம்.
ஸ்வர்ண பைரவருக்குரிய பாடல்கள் பல இருக்கின்றன. அதிலும் குறிப்பாக “தனம் தரும் வைரவன்” என்று தொடங்கக்கூடிய பாடலை ஒவ்வொரு அஷ்டமி தினத்திலும் பாராயணம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பணம் பிரச்சனை அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். மேலும் நகை வாங்க வேண்டும், அடகு கடைசியில் இருக்கக்கூடிய நகையை திருப்ப வேண்டும் என்று நினைப்பவர்களும் சொர்ண ஆகர்ஷண பைரவரை நினைத்து அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்யலாம்.
வீட்டில் வழிபாடு செய்பவர்கள் பைரவருக்கு என்று தனியாக நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அதுவும் மிளகால் செய்யப்பட்ட காரமான உளுந்த வடை, மிளகு வெண்பொங்கல், சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை நெய்வேத்தியமாக வைக்கலாம். உதாரணமாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய கேசரி, மாதுளம் பழம் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. வழிபாட்டை செய்து முடித்த பிறகு எந்த பிரச்சினை நமக்கு தீர வேண்டுமோ அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தீப வழிபாடு
இந்த முறையில் பைரவர் அவதரித்த நாளில் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் பைரவரை நாம் வழிபாடு செய்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்து பண வரவை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.