கத்திரிக்காய் பஜ்ஜி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! சுவையும் மணமும் சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு ஆரோக்கியமான இந்த சைட் டிஷ் 10 நிமிஷத்துல செஞ்சிடலாமே.

kathrikai-sojji

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஒரேவகையான சைடிஷ் செய்யாமல்,  கத்திரிக்காயை வைத்து, புது விதமாக ஒரு கத்திரிக்காய் மசியல் இப்படி செய்து பாருங்கள். கத்திரிக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் சட்னி, இந்த டிஷ்க்கு என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே 10 நிமிடத்தில் ஆரோக்கியமான இந்த கத்திரிக்காய் சொஜ்ஜி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் ஆரோக்கியம் தரும் இந்த கத்திரிக்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி சமைத்துக் கொடுங்கள். கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

brinjal

முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து விட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து பொரிய விட வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய – 15 பல் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும். ஒரு நிமிடம் வரை வெங்காயம் வணங்கினால் போதும். அடுத்தபடியாக பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 4, கத்திரிக்காய் 1/4 கிலோ நீளவாக்கில் கொஞ்சம் தடிமனாக வெட்டிக்கொள்ள வேண்டும். இவைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கத்திரிக்காய் நன்றாக எண்ணெயில் வதங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 3 சேர்க்க வேண்டும். தக்காளி, வெங்காயம் கத்தரிக்காய் இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவு துவரம்பருப்பு போடலாம். அல்லது 2 டேபிள்ஸ்பூன் அளவு வறுத்த பாசிப் பருப்பு சேர்க்கலாம்.

potato-urulai

(இந்த இடத்தில், உங்களுக்கு உருளைக்கிழங்கு வாசம் பிடித்தால் உருளைக்கிழங்கு மட்டும் குழம்பில் சேருங்கள். துவரம் பருப்பு மட்டும் சேர்க்கலாம். பாசிப்பருப்பு வாசம் படித்தவர்கள் பாசிப் பருப்பை மட்டும் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து குழம்பு வைக்க வேண்டும்.)

இறுதியாக சீரகம் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் 1 ஸ்பூன், தனியா தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து, எல்லாப் மசாலா பொருட்களும் எண்ணெயில் ஒரு நிமிடங்கள் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பு நன்றாகக் கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, குக்கரை மூடி 3 லிருந்து 4 விசில் வைத்தால் போதும்.

kathrikai-sojji1

நல்ல வாசத்தோடு கத்தரிக்காய் குழம்பு தயாராகியிருக்கும். சூடாக குழம்பை திறந்த பின்பு, உடனடியாக  ஒரு மத்தை வைத்து, நன்றாக மசித்து விடுங்கள். இந்த மசியல் ரொம்பவும் தண்ணீர் பாதத்திலும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி சுட சுட பரிமாறினால் சுவையான கத்தரிக்காய் மசியல் தயார்.