சூப்பரான கத்திரிக்காய் தெரக்கல்! இட்லி தோசைக்கு இந்த சைட் டிஷ், ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க! வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.

- Advertisement -

கத்திரிக்காய் திரக்கல், கத்திரிக்காய் அவியல், கத்திரிக்காய் பஜ்ஜி, எப்படி வேண்டும் என்றாலும் இதற்கு பெயரை வைத்துக் கொள்ளுங்கள். நிறைய பேருக்கு இந்த கத்திரிக்காய் தெரக்கல் எப்படி செய்வது என்று தெரிந்திருக்கும். இருப்பினும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கமகம வாசத்தோடு சுலபமாக கத்தரிக்காய் தெரக்கல் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு நல்ல சைட் டிஷ் ஆக இருக்கும்.

Step 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 கப், முந்திரிப்பருப்பு – 4, மிளகு – 1/4 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 5 லிருந்து 6 காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 2:
கத்தரிக்காய் – 1/4 கிலோ, உருளைக்கிழங்கு – 2, இந்த இரண்டு காய்களை நன்றாக கழுவி, சுத்தப்படுத்திவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு குக்கரை வைத்து விட்டு நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 20, மீடியம் சைஸ் தக்காளி – 2 பொடியாக நறுக்கியது, இவைகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளியை சேருங்கள். தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு விடுங்கள்.

- Advertisement -

Step 3:
இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் வதங்கியவுடன், நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயையும், உருளைக்கிழங்கையும், சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்த மசாலா பொருட்களின் அரவையை குக்கரில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலக்கி விட்டு குக்கரை மூடி, 2 விசில் விட்டால் போதும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

kathrikai-therakal1

விசில் வரும் போது அதிலிருந்து வெளிவரும் வாசம் உங்களுடைய மூக்கைத் துளைக்கும். பிரஷர் நன்றாக அடங்கியதும், குக்கரை திறந்து, ஒரு குழிக்கரண்டி வைத்து கத்தரிக்காய்களை கொஞ்சமாக மசித்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான கத்திரிக்காய் தெரக்கல் தயார். சுடச்சுட இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு சைட் டிஷ்ஷாக வைத்தால் சூப்பராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் தான் வீட்டிலேயே இருக்கிறதே! எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க? இந்த 2 பொருள் கூந்தலை பட்டு போல் சாஃப்டாக மாத்திடுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -