10 நிமிடத்தில் கத்திரிக்காய் பருப்பு கடையல் இப்படி செய்து பாருங்கள். இட்லி, தோசை, சுட சுட சாதத்திற்கு சூப்பரான சைட் டிஷ் இது. 2 விசிலில் குழம்பு வைக்க கூடிய வேலையே முடிஞ்சிடும்.

kathrikai-sojji
- Advertisement -

அவசர அவசரமாக நாளைக்கு காலையில என்ன குழம்பு வைக்கிறது என்று தெரியாமல் குழம்பும் போது, கத்தரிக்காயை வைத்து சட்டென இப்படி ஒரு பருப்பு குழம்பு வைத்து விடலாம். குக்கரில் எல்லா பொருட்களையும் போட்டு இரண்டு விசில் வைத்து, தாளித்துக் கொட்டினால் காலையில் இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் இந்த பருப்பு கடையலை ஊற்றி கொஞ்சம் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். வேலை முடிந்தது. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிஞ்சு வச்சுக்கலாம்.

முதலில் ஒரு 3 டேபிள் ஸ்பூன் அளவு துவரம்பருப்பை கழுவி தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1/4 கிலோ அளவு கத்தரிக்காயை நீளவாக்கில் சாம்பாருக்கு வெட்டுவது போல வெட்டி இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஊற வைத்திருக்கும் துவரம்பருப்பு, வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை போட்டு விடுங்கள். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 3, இரண்டாக உடைத்த பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 10 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன், சாம்பார் தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு, இந்த பொருட்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு குக்கரில் 2 விசில் வைத்தால் போதும்.

பருப்பு கத்தரிக்காய் அனைத்தும் பக்குவமாக வெந்து கிடைக்கும். குக்கரை திறந்து குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு மத்தை வைத்து இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றும் இரண்டுமாக அப்படியே மசித்து விடுங்கள். இதற்கு ஒரு ஸ்பெஷல் தாளிப்பு கொடுக்க வேண்டும். இந்த தாளிப்பு தான், கத்தரிக்காய் கடைகளுக்கு ஒரு ஹைலைட்.

- Advertisement -

1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வர மல்லி இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், நுணிக்கி வைத்திருக்கும் ஜீரகம் வரமல்லி பொடியை எண்ணெயில் போட்டு, கருவேப்பிலை போட்டு, 2 வரமிளகாய் போட்டு, கொஞ்சமாக பெருங்காயம் போட்டு, மணக்க மணக்க இந்த தலைப்பை அப்படியே குக்கரில் இருக்கும், பருப்பு குழம்பில் ஊற்றி, இந்த கத்திரிக்காய் பருப்பு கடையிலை, மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு கொதி கொதிக்க வையுங்கள். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடுங்கள். இதோட வாசம் அப்படியிருக்கும். ருசி சொல்லவே தேவையில்லை.

பின் குறிப்பு: இதை நீங்கள் சாப்பாட்டிற்கு பரிமாற வேண்டும் என்றால், தேவைப்பட்டால் இதில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, எல்லாப் பொருட்களையும் வேகவைக்கும் போதே குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -