- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கேரளா பேமஸ் புளிசேரி செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இவ்வளவு சுலபமா அதே சமயம் அட்டகாசமான சுவையில்...

கேரளா பேமஸ் புளிசேரி செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இவ்வளவு சுலபமா அதே சமயம் அட்டகாசமான சுவையில் இதுவரைக்கும் ஒரு குழம்பு ரெசிபியை நீங்க சாப்டு இருக்கவே மாட்டீங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் என்றால் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது மோர் குழம்பு, அவியல், புட்டு கொண்டைக்கடலை கறி தான். இந்த புளிக்காரியும் கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான். மாம்பழம் வைத்து செய்யப்படும் இந்த புளிக்காரி மாங்காய், அண்ணாச்சி பழம் போன்றவற்றை வைத்து கூட செய்யலாம். சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். வாங்க இப்போ இந்த சமையல் குறிப்பு பதிவில் சுவையான கேரள புளிசேரியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த புளிசேரி செய்ய முதலில் நான்கு மாம்பழத்தை எடுத்து மேல் தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய மாம்பழங்களாக இருந்தால் அப்படியே போடலாம். கொஞ்சம் பெரியதாக இருந்தால் நல்ல பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு அகலமான பேனை வைத்து அரிந்து வைத்த மாம்பழத் துண்டுகளை சேர்த்து மாம்பழம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் உப்பு, 2 பச்சை மிளகாய் கீறி அனைத்தையும் சேர்த்த பிறகு தட்டு போட்டு மூடி கொதிக்க விடுங்கள்.

இப்போது இந்த புளிசேரிக்கு தேவையான மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய், 3 பச்சை மிளகாய், 4 சாம்பார் வெங்காயம் (தோல் உரித்தது) 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கொதித்து கொண்டிருக்கும் மாம்பழத்தில் அரைத்து வைத்து பேஸ்ட்டை சேர்த்து மூடி போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் மாற்றி விட்டு 1/4 கப் புளித்த தயிர், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு லேசாக நுரைத்து வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த புளிசேரி க்கு ஒரு தாளிப்பை சேர்த்து விடலாம். அதற்கு அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 1/4 டீஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன் சீரகம், 1 காய்ந்த மிளகாயும் கிள்ளி போட்டு பிறகு 1 கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை குழம்பின் மீது ஊற்றி உடனே தட்டு போட்டு மூடி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோதுமை மாவு பணியாரம் செய்முறை

ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை நன்றாக கலந்து எடுத்து சுட சுட சாதத்துடன் இந்தப் புளிசேரியை சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு கறி வாழைக்காய் கருணைக் கிழங்கு போன்றவை சூப்பராக இருக்கும். அசைவம் சாப்பிடுவார்கள் அதில் எந்த கிரேவி வைத்து சாப்பிட்டாலும் பிரமாதமாக இருக்கும். கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்