வீட்டிலேயே கரோடின் சிகிச்சை செய்யும் முறை

keratin treatment
- Advertisement -

நம்முடைய மூளை வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வெண்டைக்காய். வெண்டைக்காயை நாம் உணவில் அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளும் பொழுது அது நம்முடைய எலும்புகளுக்கு நெகிழ்வுத் தன்மையை தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. இதே வெண்டைக்காயை நம்முடைய முகத்திற்கும் தலைமுடிக்கும் நம்மால் பயன்படுத்த முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வெண்டைக்காயை பயன்படுத்தி தலைமுடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடுவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய சிகிச்சைகளில் ஒன்று தான் கரோட்டின் சிகிச்சை. இது ஒரு வகையான புரதச்சத்து ஆகும். பொதுவாக முடி மற்றும் நகங்கள் நன்றாக வளர்வதற்கு இந்த கரோட்டின் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நாம் பியூட்டி பார்லர் சென்று நம்முடைய தலைமுடிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய தலைமுடி பட்டுப்போல மென்மையாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் வறண்ட முடியும் மிகவும் அழகாக காட்சி தரும். அதே சமயம் இதில் சில ரசாயன பொருட்கள் கலந்த கிரீம்களை உபயோகப்படுத்துவதால் தலைமுடியில் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. இதை தவிர்ப்பதற்கு வீட்டிலேயே வெண்டைக்காயை வைத்து கரோட்டின் சிகிச்சை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

நம்முடைய தலைமுடியின் நீளத்திற்கு ஏற்றவாறு வெண்டைக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். நடுத்தரமாக முடி இருக்கக்கூடியவர்கள் ஐந்து வெண்டைக்காயை எடுத்துக் கொண்டால் போதும். இந்த வெண்டைக்காயை பொடி பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெண்டைக்காயை போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காய் வெந்த பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு ஸ்பூன் சோளமாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி விழுகாத அளவிற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த இந்த வெண்டைக்காய் விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கரைத்து வைத்திருக்கும் சோளமாவையும் அதில் ஊற்றி அடுப்பில் வைத்து சோளமாவின் பச்சை வாடை போகும் அளவிற்கு குறைந்தது குறைந்தது 10 நிமிடமாவது அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும்.

- Advertisement -

இது நன்றாக கிரீம் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி இந்த கலவையை அதில் ஊற்றி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த வெண்டைக்காய் விழுதை நம்முடைய தலைமுடியில் நாம் சிறு சிறு பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் படும் அளவிற்கு தடவுவதோடு மட்டுமல்லாமல் தலை முடியின் நுனி வரை தேய்க்க வேண்டும். இதை அப்படியே 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்துவிட்டு வரலாம்.

இப்படி செய்வதன் மூலம் வறட்சியால் முடிகள் உதிர்வது தடுக்கப்படுகிறது. வறண்ட கூந்தலும், பொலிவிழந்த கூந்தலும் மென்மையாகவும், அழகாகவும் தென்படும். முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலுமாக நீங்கும். சுருட்டை முடி இருப்பவர்கள் இந்த கரோடின் சிகிச்சையை வீட்டிலேயே இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று செய்வதன் மூலம் அவர்களின் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்

மிகவும் எளிமையான முறையில் நாம் உணவாக உட்கொள்ளும் இந்த காய்கறியை நம்முடைய தலைக்கு பயன்படுத்தி தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணிக்காத்து செலவுகளையும் குறைத்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -