- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகெட்ட காலமும் நல்ல காலமாக மாற வளர்பிறை அஷ்டமி வழிபாடு

கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வளர்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் நல்லது என்ற ஒன்று இருக்கும் கெட்டது என்று ஒன்று இருக்கும். ஆனால் நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக போய் சென்று விடும் சூழ்நிலையும் ஏற்படும். நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நம்முடைய நேரமானது நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கி கஷ்டத்துக்கு உட்படுத்தும். அப்படிப்பட்ட பொல்லாத நேரமும் நல்ல நேரமாக மாறுவதற்கு வளர்பிறை அஷ்டமி நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு தெய்வத்தின் அருள் என்பது வேண்டும். நமக்கு நல்ல நேரம் இருந்தால் தான் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நல்ல விதமாக நடைபெறும். ஒருவேளை நம்முடைய நேரம் சரியில்லை என்னும் பட்சத்தில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தெய்வத்தின் அருளையை நாம் நாட வேண்டும். அந்த வகையில் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறுவதற்கு கெட்ட பெயரும் நல்ல பெயராக மாறுவதற்கு கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்வது அஷ்டமி திதி. வளர்பிறை அஷ்டமியாக இருந்தாலும் தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும் நாம் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது அதனால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். நம்முடைய கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வேண்டும் என்றால் காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடிய கால பைரவரை நாம் சரணாகதி அடைய வேண்டும். அந்த வகையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் அஷ்டமி திதி என்பது ஆரம்பம் ஆகிறது. வளர்பிறை அஷ்டமியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ராகு காலத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து கால பைரவரின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை எழுதி கையில் வைத்துக்கொண்டு முழுமனதோடு உங்களுடைய கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு தெருநாய்களுக்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு உணவுப்பொருளை வாங்கி தானமாக தரவேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பொல்லாத நேரமாக இருந்தாலும் அந்த நேரம் அனைத்தும் மாறி நல்ல நேரம் உண்டாகும். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்”

இதையும் படிக்கலாமே: செல்வங்களை சேர்க்கும் அக்னி நட்சத்திரம் முதல் நாள் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை 11 முறை மட்டும் கால பைரவரை மனதார நினைத்து எழுதி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கெட்ட காலம் அனைத்தும் நல்ல காலமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்