வாரம் 1 முறை இந்த தூபத்தை போட்டாலே போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி, அனைத்து தெய்வங்களும் நம் வீட்டில் வாசம் செய்ய விரும்பி வரும்.

dhupam

பொதுவாகவே ஒரு வீடு என்பது தெய்வ அம்சம் பொருந்திய வீடாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல் நம்முடைய வீட்டில் குடியேறி விட்டால், நம் வீட்டில் இருக்கும் தெய்வங்கள் வீட்டுக்கு வெளியே சென்று விடும் என்று சொல்லுவார்கள். இதன் அடிப்படையில் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் இவைகளை எப்படி வெளியேற்றுவது? கண்ணுக்கு நிறைந்த தெய்வ சக்தியை நம் வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த தூபத்தை உங்களுடைய வீட்டில் தினம்தோறும் போட்டு வரலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களாவது போடவேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அப்படியும் முடியாதவர்கள் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது இந்த தூபத்தை வீட்டில் போட வேண்டியது அவசியமான ஒரு விஷயம்.

இந்தப் பொருட்களை நம் வீட்டில் கொண்டுவந்து தூபம் போடுவதினால், நவக்கிரகங்களை திருப்தி செய்த அனுகிரகம் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்த இறைவனின் ஆசீர்வாதத்தை முழுமையாக நம்மால் பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. சரி அந்த பொருள் என்னென்ன, என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்வோம்.

ஸ்வர்ண பைரவர் – வென்கடுகு, அஷ்டபைரவர் – நாயுருவி வேர், மருதாணி விதை – மகாலட்சுமி, வில்வம் – சிவன், வேப்ப இலை – அம்மன், அருகம்புல் – வினாயகர், நொச்சியிலை பொடி – பெருமாள் இறுதியாக குங்கிலியம். மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் அந்தந்த இறைவனுக்கு மிகவும் உகந்தது. இந்த பொருட்களை எல்லாம் வாங்கி பொடிசெய்து தூபம் போட தயாராக ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வழக்கம் போல உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது இந்த பொருட்களை சேர்த்து தூபம் போட்டு வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நிச்சயமாக நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லா வகையான கஷ்டங்களுக்கும் உடனடி தீர்வைத் தரும் இந்த தூபத்தை போடுவதன் மூலம் உங்களுடைய வீடும் நிச்சயமாக கோவிலாக மாறும்.

sivarathiri-poojai

இந்த பொருட்களெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே கிடைக்கின்றது. அந்த பொடியை வாங்கி ஒன்றாக கலந்து வைத்து பயன்படுத்தினாலும் சரி, அல்லது இந்தப் பொருட்களையெல்லாம் தனித்தனியாக வாங்கி காயவைத்து மொத்தமாக நீங்களே அரைத்து வைத்துக் கொண்டாலும் சரி, எல்லா பொருட்களையும் சம விகிதத்தில் வாங்கி பொடி செய்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள். சக்தி வாய்ந்த இந்த தூபம் உங்களுடைய வீட்டை பாதுகாப்பு வட்டமாக இருந்து காக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.