கேது பகவான் பரிகாரம்

Astrology ketu

நவகிரகங்களில் சூரியன் முதல் சனி கிரகம் வரை உண்மை கிரகங்கள் ஆகும். ஆனால் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆகும். அதாவது சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிழல்கள் தான் ராகு மற்றும் கேது. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களாகும் இந்த ராகு மற்றும் கேது. இதில் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷம் குறித்தும், தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Rahu Kethu

 

கேது பகவான் பரிகாரம்

ஜோதிடத்தில் “ஞானகாரகன்” என்று கேது பகவான் குறிப்பிடப்படுகிறார். ஒரு நபர் ஆன்மீக ரீதியாக வாழும் போது மிகவும் உயரிய நிலையான ஞானநிலையை அடைவதற்கு கேது பகவானின் அருள் மிகவும் அவசியமாகும். மேலும் ஒரு மனிதனின் தாய்வழி பாட்டனாருக்கு காரகனாக இருப்பதால் இவர் மாதுர்காரகன் என அழைக்கப்படுகிறார். அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடு, தொலைதூர பயணங்கள், செய்யும் தொழிலில் யாரும் எட்ட முடியாத சாதனைகளை செய்ய வைப்பது போன்றவற்றை செய்ய வைப்பவர் கேது பகவான்.

கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின் கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும்.

kethu

- Advertisement -

கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும்.வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்.

ragu ketu

ராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
ராமேஸ்வரம் கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ketu pariharam in Tamil or Ketu dosham pariharam in Tamil or Ketu dosha nivarana pariharam in Tamil. It is also called as ketu dosham neenga pariharam or Ketu dosha remedies in Tamil or kethu dosham pariharam in Tamil.