- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர கிராம்பு தாந்திரீக பரிகாரம்

கடன் தீர கிராம்பு தாந்திரீக பரிகாரம்

- Advertisement -

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். மகாலஷ்மி தாயாரின் அருள் நமக்கு கிடைத்தால் பணம் தொடர்பான எந்த பிரச்சினையும் நமக்கு ஏற்படாது. பணம் தொடர்பாக ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன். வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அதை சரி செய்வதற்காக பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அப்படி வாங்கிய கடனை நாம் திருப்பி அடைப்பதற்கு பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். இந்த பணவரவை அதிகரிக்க கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார். எப்படி பார்த்தாலும் பணம் ரீதியாக எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் நமக்கு அருள்புரியக்கூடிய தெய்வமாக திகழ்பவர் மகாலட்சுமி தாயார் தான். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

மிகவும் எளிமையாக எந்தவித கஷ்டமும் இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரத்தை தான் தாந்த்ரீக பரிகாரம் என்று சொல்வோம். அந்த வகையில் கடன் பிரச்சினை தீருவதற்காக பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் அதேசமயம் பணவரவை அதிகரிப்பதற்குரிய முயற்சிகளையும் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்களுடைய முயற்சிகளில் வெற்றி அடைவதற்கு இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது மொட்டு உடையாத இரண்டு கிராம்பு வேண்டும். கிராம்பு என்பது ஜன வசியம் செய்யக்கூடிய ஒன்றாகவும் பண வசியம் செய்யக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. பண வசியம் ஏற்படுவதால் கடன் பிரச்சினையும் தீரும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிராம்பை கடனுக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடிய செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது கடன் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த நேரங்களை தவறவிட்டவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். செவ்வாய் ஹோரையில் செய்வது மிகவும் மிகவும் நல்ல பலனைத் தரும்.

அடுத்ததாக இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பேப்பர் வேண்டும். அந்த பேப்பரில் கோடு போட்டு இருக்கக் கூடாது. இந்த பேப்பரில் மகாலட்சுமி தாயாரை வசியம் செய்வதற்குரிய அதேசமயம் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய ஒரு மந்திரத்தை நாம் எழுத வேண்டும். அந்த மந்திரத்தை செவ்வாய் பகவானுக்குரிய நிறமான சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஸ்ரீம் கமலதாரிணி ருண நிவாரணி வசி வசி

இப்படி எழுதி முடித்துவிட்டு நாம் எடுத்து வைத்திருக்கும் அந்த கிராம்பை இந்த பேப்பரின் மேல் வைத்து பேப்பரை நன்றாக மடித்துக் கொள்ளுங்கள். கிராம்பு கீழே விழுகக் கூடாது. இந்த பேப்பரை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது நீங்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறையிலும் வைக்கலாம்.

ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். விரைவிலேயே பணவரவு என்பது ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய கடன் பிரச்சனை தீரும். அப்படி கடன் பிரச்சனை தீர்ந்த பிறகு ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்து வைத்து அதில் நாம் எழுதி வைத்திருக்கும் பேப்பரையும் கிராம்பையும் கொண்டு வந்து வைத்து அதற்கு மேல் ஒரு கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டும். இது எரிந்து முடிந்த பிறகு இதில் இருக்கக்கூடிய சாம்பலை வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே கடன் மற்றும் நோய் நீங்க

மிகவும் எளிமையான ஒரே ஒருமுறை செய்யக்கூடிய இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

சற்று முன்