நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நேர்மறையாக யோசிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும். நேர்மறையான செயல்களை செய்ய வேண்டும். இப்படி அனைத்துமே நேர்மறையாக செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் நன்மைகள் மட்டுமே நடைபெறும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும்.
நேர்மறை ஆற்றல்கள் இருக்கும் இடத்தில் எந்த வித தீய சக்திகளுக்கும் இடம் இருக்காது. தெய்வ சக்தியின் நடமாட்டம் அதிகரிக்கும். சுருக்கமாக நேர்மறை ஆற்றலை நாம் தெய்வீக சக்தி என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட தெய்வீக சக்தியான நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிப்பதற்கு செய்யக் கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் கிராம்பு பரிகாரம்
இன்றைய காலத்தில் நம்முடைய கடின முயற்சியோடு சேர்த்து தெய்வத்தின் அருள் இருந்தால்தான் அந்த முயற்சியில் நம்மால் வெற்றி பெற முடியும். அந்த முயற்சியும் நல்ல முயற்சியாக இருந்தால்தான் முழுமையான பலனை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட நல்ல முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது தெய்வத்தின் அருள் நமக்கு வேண்டும் என்றால் நம்மிடமும் நம்மை சுற்றியும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும்.
மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியது கிராம்பு என்று கூறப்படுகிறது. இந்த கிராம்பு மகாலட்சுமிக்கு மட்டும் உகந்த ஒரு பொருளாக திகழ்வது கிடையாது. துர்க்கை அம்மன், மகாலட்சுமி, மகாவிஷ்ணு, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கும் உகந்த பொருளாகவே திகழ்கிறது.
இத்தனை தெய்வங்களும் ஒரு சேர வீற்றிருக்கக் கூடிய பொருளாக திகழக் கூடிய இந்த கிராம்பை நம்முடைய வீட்டில் நாம் அதிக அளவில் வைத்திருப்பதன் மூலம் நம் வீட்டில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் எந்தெந்த இடத்தில் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டும், நன்மைகள் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த இடங்களில் கிராம்பை வைக்க வேண்டும்.
ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 7 மொட்டு உடையாத கிராம்பை வைத்து மூட்டையாக கட்டி, மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் நாம் வைத்து விட்டோம் என்றால் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து பணவரவு என்பது அதிகரிக்கும்.
இதே போல் தான் தானியம் அதிகரிக்க வேண்டும் அதாவது வீட்டில் சாப்பாட்டிற்கு எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்த மூட்டையை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போட்டு விட வேண்டும். அப்பொழுது சாப்பாட்டிற்கு எந்தவித குறையும் இருக்காது. நகை அதிகமாக சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மூட்டையை நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இப்படி நமக்கு எந்த பொருட்கள் குறைவில்லாமல் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பொருட்களுடன் நாம் கிராம்பை வைக்கும் பொழுது கண்டிப்பாக முறையில் அதில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல்கள் அந்த பொருளை மேலும் மேலும் வளரச் செய்யும்.
இதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கக் கூடிய துர்க்கை அம்மன், மகாலட்சுமி, மகாவிஷ்ணு, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு இந்த கிராம்பை பூ கட்டுவது போல் மாலையாக கட்டி அணிவிப்பதன் மூலம் வீட்டில் அதிக அளவு நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும். தெய்வ சக்தி வீட்டிற்குள் நடமாடும்.
இதையும் படிக்கலாமே:கர்ம வினை நீங்க புற்று மண் பரிகாரம்
பல அற்புதமான ஆற்றல்களை கொண்ட கிராம்பை இந்த முறையில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கி தெய்வீக சக்தி அதிகரித்து அதன் மூலம் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும். இந்த பரிகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து தங்கள் வீட்டில் தெய்வ சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்