இன்று கோகுலஷ்டமி. கிருஷ்ணரை மகிழ்விக்க அவருக்கான படையலில் இந்த 1 பொருளை மட்டும் மறக்காமல் வைத்துவிடுங்கள். உங்கள் கடன் பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு உண்டாகும்.

kirishnan
- Advertisement -

குழந்தைகள் இருக்கும் அனைத்து வீடுகளிலும் கோகுலாஷ்டமியை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள். கிருஷ்ணர் என்றாலே அவருடைய குழந்தைப் பருவம் தான் அனைவரது நினைவுகளிலும் இருக்கும். அவர் செய்த லீலைகளையும், சுட்டித்தனங்களையும் பல கதைகளாக நமக்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த கோகுல அஷ்டமி நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த பலகாரங்களை படைத்து அவரை மகிழ்வித்து அவரின் ஆசிகளை பெறுவதே இந்த நாளின் சிறப்பாகும். இவ்வாறு கிருஷ்ணருக்கு படைக்கும் படையலில் இந்த ஒரு பொருளை மட்டும் மறக்காமல் வைத்துவிட வேண்டும். அது என்ன பொருள் அதற்கான பலன்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகின்றோம்.

kirishnan1

கிருஷ்ணரின் பிறப்பு:
உலகத்தில் பாவங்கள் அதிகமாகிவிட்டதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணுவிடம் சென்று முறையிட்ட பின்னரே விஷ்ணு பகவான் கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். பூமியில் பாவங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்த கம்சனை அழிப்பதற்காகவே கிருஷ்ணர் கம்சனின் தங்கையான தேவகியின் வயிற்றில் எட்டாவது மகனாகப் பிறந்தார்.

- Advertisement -

வாசுதேவர் மற்றும் தேவகியின் மகனாக யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணபகவான் அவரது குழந்தைப் பருவத்தில் நிறைய லீலைகளை புரிந்துள்ளார். வீட்டில் செய்யும் பலகாரங்களான லட்டு, கடைந்து வைத்திருக்கும் வெண்ணை, நெய் இவற்றை திருடி சாப்பிடுவது மற்றும் தனது தோழர்களுடன் சேர்ந்து குறும்புத்தனங்கள் செய்வது போன்ற பல விளையாட்டுகளை புரிந்துள்ளார்.

kirishnan3

குசேலர்:
கிருஷ்ணருடைய குழந்தை பருவத்தில் இவருக்கு நெருங்கிய தோழராக இருந்தவர் குசேலர். இவர் அவருடைய இளமைப் பருவத்தில் திருமணமாகி, குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு சமயம் குசேலர் கிருஷ்ணரைப் பார்த்து தனது ஏழ்மை நிலை குறித்து உதவி கேட்கலாம் என்று கிருஷ்ணரை காண சென்றிருந்தார். ஆனால் கிருஷ்ணரை பார்த்தவுடன் அவரது கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து விட்டு கிருஷ்ணருக்காக தான் எடுத்து வந்த அவலை மட்டும் அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். ஆனால் குசேலரின் கஷ்டங்கள் அனைத்தையும் முன்னரே அறிந்திருந்த கிருஷ்ணர், குசேலர் மனம் மகிழும்படி அவர் கொடுத்த அவலை இரண்டு கைகளாலும் அள்ளி வாய் நிறைய சாப்பிட்டு மகிழ்ந்தார். அதன்பிறகு தான் குசேலரின் ஏழ்மை நிலை மறைந்து அவர் செல்வச் செழிப்புள்ள செல்வந்தர் ஆனார்.

- Advertisement -

அவல்:
எனவே இந்த கோகுல அஷ்டமி நாளில் மாலை 6 மணிக்கு மேல் எட்டுவிதமான நெய்வேத்தியங்கள் படைப்த்து கிருஷ்ணரை வணங்குவது மிகவும் விசேஷமாகும். இதில் மிகவும் அவசியமான ஒரு பொருள் அவல் ஆகும். இந்த அவலை புல்லாங்குழலில் நிரப்பி வைத்து கிருஷ்ணரை வணங்கினால் சிறப்பு வாய்ந்த பலன்கள் கிடைக்கும். அதற்காக ஒரு வெள்ளை நிற நூலை மஞ்சள் நிற தண்ணீரில் நனைத்து புல்லாங்குழலில் இருக்கும் சிறிய ஓட்டைகளை அடைக்குமாறு சுற்றி வைத்துக் கொண்டு, புல்லாங்குழல் முழுவதும் அவல் கொண்டு நிரப்பி கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும்.

aval

இவ்வாறு இந்த அவலை மட்டும் நாம் படைத்து விட்டோம் என்றால் கிருஷ்ணர் மனம் குளிர்ந்து எவ்வாறு குசேலருக்கு அருள்புரிந்தாரோ அதுபோல உங்கள் வேண்டுதலையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அவை சீக்கிரத்தில் அடைந்து உங்கள் வாழ்க்கை மிகவும் செல்வ செழிப்புடன் இருக்கும்.

- Advertisement -