சமையல் செய்யும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அட்டகாசமான 10 சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக!

kitchen
- Advertisement -

பெண்கள் மட்டுமல்ல இந்த காலத்தில் ஆண்களும் சமையலில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் கூட எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமையல் கட்டில் சமபங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த அட்டகாசமான 10 டிப்ஸ் இதோ உங்களுக்காக இந்த சமையல் குறிப்பு பதிவில்!

குறிப்பு 1:
சமைக்க பயன்படுத்தும் எண்ணெய் பாட்டில்களில் ஒழுகாமல் இருக்க பழைய பயன்படுத்தாத சாக்ஸ் ஏதாவது இருந்தால் அதை மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் பாட்டில் பிசுபிசுப்பாக இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
சப்பாத்தி மாவு பிசைவதற்கும், இட்லி மாவு உப்பு போட்டு கலப்பதற்கும் வெறும் கைகளை பயன்படுத்தாமல் ஒரு மெல்லிய பாலித்தின் கவரை கையில் மாட்டிக் கொண்டு பிறகு கலந்தால் நன்கு கலக்கவும் வரும், கைகளில் மாவு ஒட்டிக் கொள்ளாமல் எளிதாக எடுக்கவும் வரும்.

குறிப்பு 3:
நீண்ட நாட்கள் எலுமிச்சை பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாப்பதற்கு ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் ஒரு கத்தரித்த நியூஸ் பேப்பரில் மடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வையுங்கள். ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்கள் வைத்திருக்கும் டப்பாவில் நான்கு கிராம்பு துண்டுகளை போட்டு வையுங்கள். இந்த வாசத்திற்கு ஒரு எறும்பு கூட பக்கத்தில் வராது.

குறிப்பு 5:
வீட்டில் கேரட் துருவும் எவர்சில்வர் துருவல் மற்றும் கத்தி போன்றவை மழுங்கி போய்விட்டால் இதனை கூர்மைப்படுத்துவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய செராமிக் கப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பகுதியில் வைத்து லேசாக தேய்த்து விட்டால் போதும் கூர்மையாக மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு 6:
மிளகாய் தூள் அரைத்து வந்தவுடன் அதை நன்கு பேன் காற்றில் ஆற வைத்து பின்னர் தான் ஸ்டோர் செய்ய வேண்டும். இல்லையேல் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காமல், வண்டு வர ஆரம்பித்து விடும். இது போன்ற மிளகாய் தூளில் வண்டு வராமல் இருக்க வசம்பு ஒன்றை போட்டு வைக்கலாம் அல்லது பெருங்காயத்தூளை கொஞ்சம் தூவி வையுங்கள்.

குறிப்பு 7:
ரசம் அல்லது குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு சாதத்தை உருண்டையாக கெட்டியாக பிடித்து அதில் போட்டு வையுங்கள். சாத உருண்டை அதிகமாக இருக்கும் உப்பை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

குறிப்பு 8:
சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்னர் வடித்து வையுங்கள். சாதம் சற்று குழைந்து போகும் நிலையிலும் இது போல செய்தால் சரியாக வரும்.

குறிப்பு 9:
தேங்காயை ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் அழுகாமல் வைத்திருப்பதற்கு தேங்காயை உடைத்தவுடன் அதன் மூடியை ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் கவிழ்த்து வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே வையுங்கள். தேங்காய் துண்டுகளையும் இது போல கவிழ்த்து வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும் மேலும் சிறிதளவு எலுமிச்சை சாறை தடவி வைத்தாலும் நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

குறிப்பு 10:
அதிரசம் செய்யும் பொழுது அதிரச மாவுடன் சிறிதளவு பேரிச்சை பழ துண்டுகளை நறுக்கி போட்டு செய்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

- Advertisement -