சமையல் அறையில் இனி இதையும் தெரிந்து வெச்சுக்கோங்க! உங்களுடைய வேலை சுலபமாக மாறும்.

kitchen-tip1

Tip No 1:
பொதுவாகவே சமையலறையில் பயன்படுத்தக்கூடிய நெய் பாட்டில்கள் எண்ணெய் பாட்டில்களை சுத்தம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இந்த பிசுபிசுப்பு நிறைந்த பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி. அரிசி வடித்த கஞ்சி பருப்புக் கொதிக்கும் தண்ணீர் இப்படி சூடாக இருக்கக்கூடிய தண்ணீரில் நெய் பாட்டிலை ஒரு நிமிடம் வைத்தாலே போதும். அந்த சூட்டிற்கு உள்ளே இருக்கும் நெய் அத்தனையும் உருகி வெளியேவந்துவிடும். ஒரு சொட்டு கூட வீணாகாமல் நெய் சின்ன பாட்டிலில் இருந்து வெளியே எடுத்துவிடும்.

kitchen-tip2

அரிசி கழுவிய தண்ணீர், பருப்பு கழுவிய தண்ணீர், இந்த தண்ணீரை வீணாக கீழே வடிக்காமல், பிசுபிசுப்பு நிறைந்த பாட்டில்களை கழுவுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை பிசுபிசுப்பாக இருக்கும் பாட்டிலுக்குள் ஊற்றி பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி கொஞ்சமாக சோடா உப்பு போட்டு நன்றாக குலுக்கி 1 மணி நேரம் ஊற விட்டு விடவேண்டும். அதன் பின்பு பிசுப்பு பிசுப்பு நிறைந்த அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, கொஞ்சமாக கல்லுப்பு, கொஞ்சமாக அரிசி போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் குலுக்கி கழுவினால் அந்த பாட்டில்கள் அடியில் கூட சுத்தமாகிவிடும்.

Tip No 2:
அடுத்தபடியாக நிறைய பேர் காபி பவுடர் வரும் பாட்டிலிலை கழுவி சுத்தம் செய்து, வீட்டில் மளிகைப் பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த காபி பவுடர் பாட்டிலில் மளிகை பொருட்களை சேகரித்து வைத்தால் பூச்சி புழு அவ்வளவு எளிதில் வராது. குறிப்பாக இட்லி பொடி, பருப்பு பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி போன்ற மசாலா பொருட்களை இதில் சேகரித்து பாருங்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். வருடக்கணக்காகனாலும் இட்லி பொடியை இந்த பாட்டிலில் கொட்டி வைத்தால் ப்ரஷாகவே இருக்கும்.

சரி, இந்த பாட்டில்களை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டம். எப்படி என்றால் இதன் மேலே ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை நம்மால் அவ்வளவு சுலபமாக எளிதில் பிரித்து எடுக்க முடியாது. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். சுடுகின்ற தண்ணீரில் ஒரு நிமிடம் இந்த பாட்டிலையும் அந்த மேல் மூடியையும் போட்டு ஊறவைத்தால் போதும். ஒன்று அல்லது இரண்டு நிமிடத்தில் மேலே உள்ள ஸ்டிக்கர் அனைத்தும் தானாக பிரிந்து வந்துவிடும். பாட்டில் மூடியில் உயிர் பக்கத்தில் இருக்கும் அட்டையையும் சுலபமாக எடுத்து விடலாம். பாட்டில் பார்ப்பதற்கு அழகாக மாறிவிடும்.

- Advertisement -

Tip No 3:
முட்டையின் உடைய ஒடினை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். தோசைகல் கடாய் போன்ற பாத்திரங்கள் அடியில் கருப்பாக பிடித்திருந்தால் அதை நீக்குவதற்கு இந்த முட்டை ஓடு தோல் மிக மிக பயனுள்ளதாக அமையும்.

எந்த பாத்திரம் கருப்பு நிறமாகி அதிகமாக கரி படிந்துள்ளதோ அந்த இடத்தில் லேசாக தண்ணீர் தெளித்து கொஞ்சம் முட்டை ஓடு பவுடரை அதன் மேல் தூவி கொஞ்சம் பாத்திரம் தேய்க்கும் லிக்விடும் ஊற்றி நன்றாக இந்த கலவையை பாத்திரம் முழுவதும் தடவி 20 நிமிடம் அப்படியே ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு சாதாரண ஸ்க்ரபர் கொண்டு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே உங்களுடைய கருப்பாக இருக்கும், கரி பிடித்த இடம் அனைத்தும் சுத்தமாகிவிடும்.

kitchen-tip3

Tip No 4:
சமையலறையில் சில பொருட்களை கவரோடு வைத்து பயன்படுத்தவோம். பாதி சமைத்து விட்டு மீதம் இருக்கும் பொருளை அப்படியே எடுத்து வைக்க சில பேர் ரப்பர் பேண்ட் பயன்படுத்துவார்கள். ரப்பர் இல்லாத சமயத்தில், உங்களுடைய பொருட்களை பாதுகாக்க தலைக்கு போடும் ஹேர் பின்னை இப்படி மேலே உள்ள படத்தைப் பார்த்து பயன் படுத்திக்கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு உபயோகமானதாக தான் இருக்கும்.