கோடைகாலத்தில் கை கொடுக்கும் பாட்டி வைத்திய குறிப்புக்கள்

summer-tips-tamil-1
- Advertisement -

கோடைகாலத்தில் தகிக்கும் சூரியக்கதிர்களால் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களும் இக்காலத்தில் அவதியுறுகிறோம். இக்காலத்தில் மனிதர்கள் நாம் நம் உடல்நலத்தையும் அதன் தட்பவெப்பத்தையும் சரியான விகிதத்தில் பேணிக்காப்பது அவசியமாகும். அதற்கான நம் மண்ணின் பாரம்பரிய மருத்துவக்குறிப்புகள் சிலவற்றை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

sunny

குறிப்பு 1 :
குளிர்சாதன பெட்டி கொண்டு குளிர்விக்கப்படும் நீரை தவிர்த்து நம் பாரம்பரிய மண்பானை நீரை அதிகம் குடியுங்கள். இதன் மூலம் நமது உடலுக்கு குறிர்ச்சி கிடைக்கும். அதோடு பானை தயாரிப்பவர்களுக்கு சிறு வருமானமும் கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 2 :
ஒரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மல்லிப்பூவை ஊறவைத்து அந்த நீரை பருகலாம். இதன் மூலமும் உடல் நன்கு குளிர்ச்சியடையும். ஆனால் இந்த நீரை அதிகம் பருகுவதால் சலி பிடிக்க வாய்ப்புண்டு.

malligai poo

குறிப்பு 3 :
கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேற வாய்ப்புண்டு. இதன் காரணமாக நம் ரத்தத்தில் உப்பிழப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அடிக்கடி குடிக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 4 :
கோடைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வியர்க்குரு, சிறு கட்டிகள் போன்றவை வர வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க அரைத்த சந்தனத்தை பூசிக்கொள்ளலாம்.

malligai poo

குறிப்பு 5 :
வெயில் காலத்தில் நமது மனம் நிழலை தேடுவது இயல்பு. எப்போதும் AC அறையிலே இருக்காமல் வேப்ப, புங்க மரங்களின் நிழல்களில் முடிந்த அளவிற்கு இளைப்பாருங்கள் இதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்வுகொள்ளும்.

இதையும் படிக்கலாமே:U
மரு நீங்க இயற்கை வைத்தியம்

சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள், பாட்டி வைத்தியம் போன்ற பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -