செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்கள் யாராவது இருப்பார்களா? நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவோம். அதிலும் ஒரு சிலருக்கு உழைக்காமலேயே செல்வநிலை உயர்ந்து கொண்டே போகும். அப்படிப்பட்டவர்களை தான் அதிர்ஷ்டசாலிகள், யோகக்காரர்கள் என்று கூறுவர். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஏகாதசி பரிகாரம்
செல்வநிலை உயர வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும், அதிர்ஷ்டம் பெருக வேண்டும், யோகம் உண்டாக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் அனைவருமே பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய ஏகாதசி திதி அன்று பெருமாளை வழிபாடு செய்வதோடு சில எளிமையான பரிகாரங்களையும் நாம் செய்தோம் என்றால் நமக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு எளிமையான பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை ஜூன் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு பெருமாளுக்கு உகந்த துளசி இலையும், பச்சை கற்பூரமும் வேண்டும். நம்முடைய வீட்டு நிலை வாசலில் கிரகலட்சுமி வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிரகலட்சுமி வீற்றிருக்கக்கூடிய நிலை வாசலில் தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம்.
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப துளசி இலைகளை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே மூன்று நான்கு துண்டுகள் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இந்த தட்டை வீட்டு நிலை வாசலுக்கு வெளியே ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து விடுங்கள். இந்த தட்டு ஒரு மணி நேரம் நிற
லை வாசலுக்கு வெளியேவே இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அந்த தட்டை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்று இரவு முழுவதும் அது பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் பச்சை கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்திலும் பர்சிலும் வைத்து விட வேண்டும். துளசி இலையை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் ஏகாதசி அன்று பரிகாரம் செய்வதன் மூலம் நம் வீடு தேடி நமக்கு அதிர்ஷ்டமும், யோகமும் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: துன்பங்களை நீக்கும் தேய்பிறை ஏகாதசி
பெருமாளை முழு மனதோடு நம்பி பெருமாளுக்கு உரிய இந்த பொருட்களை நிலை வாசலில் வைத்து பரிகாரம் செய்பவர்களுக்கு கோடீஸ்வர யோகம் அவர்களை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.