Virat Kohli : டிரெஸ்ஸிங் ரூமில் யாரும் பதற்றமடையவில்லை, உதவியாளரும் கஷ்டப்படவில்லை – கேப்டன் கோலி ஆதங்கம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.

Cup

பிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. நடந்து முடிந்த இந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கோலி : இந்த தோல்விக்கு பிறகு நான் ஓய்வு அறைக்கு சென்றபின் இந்திய வீரர்கள் யாரும் பதற்றம் அடையவில்லை. உதவியாளர்களும் பதற்றம் அடையவில்லை.அதன் காரணம் நாங்கள் தொடர் முழுவதும் நன்றாகவே விளையாடினோம்.

Kohli

மேலும், வீரர்களின் செயல்பாடு அணிக்கு திருப்தி அளித்தது. அது தவிர இந்த அணியே உலகக்கோப்பை தொடரிலும் ஆடும் இது அணியின் பாதிப்பு என்று யாரும் கூற இயலாது. ஏனெனில், இந்திய அணி தற்போது வலுவாகவே உள்ளது.உலகக்கோப்பை துவங்குமிந்த சமயத்தில் இது போன்ற தகவல்களை நாம் காதில் போட்டுகொண்டால் அது நமக்கே ஆபத்து எனவே இதனை நான் கேக்கபோவதில்லை என்று கோலி தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Gambhir : தோனியை சேர்த்தாலும் இது சிறந்த டீம் இல்லை – இப்படி சொல்வதன் காரணம் இதுதான் கம்பீர் ஓபன் டாக் விவரம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -